அரசியல்

திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !

திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆளுநர் ஆர்.என்.ரவி மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய நிகழ்ச்சியில், திருவள்ளுவர் எழுதாத திருக்குறள் போன்று வடிவமைத்து திருக்குறள் எண் 944 என குறிப்பிட்டு போலி திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்ததை ஒரு நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட சதியாகவே கருதுகிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அய்யன் திருவள்ளுவரால் எழுதப்பட்டு உலகப்பொதுமறை என உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறநூல் திருக்குறளாகும். மதச்சார்பின்மை, அறநெறி, சமத்துவம், அன்பு, ஒழுக்கம் ஆகிய தத்துவங்களை வலியுறுத்தும் திருக்குறள் தமிழரின் உயர்ந்த பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றும் பெருநூலாக திகழ்கிறது.

தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவருமான பண்டிதர் அயோத்தி தாசர் அவர்கள் பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் என்பவர் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிசு துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவத்திற்கு வந்ததுள்ளது.

திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !

இந்தியாவில் உள்ள வலதுசாரி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க மற்றும் சங்பரிவாரங்களும், இந்தியாவை இந்து நாடாகவும், திருக்குறள் கூறும் அறநெறிகளுக்கு எதிரான சனாதன நால்வர்ண கோட்பாட்டை பின்பற்றும் நாடாகவும் மாற்றுவதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளுவரை சனாதன வாதியாகவும், திருக்குறளை சனாதன நூலாகவும் காண்பிக்க பல்வேறு பித்தலாட்ட முயற்சிகளும், கட்டுகதைகளும் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவள்ளுவருக்கு பூணூல் அணிவது, காவி உடை அணிவித்து புகைப்படம் வெளியிடுவது, நெற்றியில் நாமம் இடுவது, சிலையின் மீது காவி வர்ணம் பூசுவது திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்துவது, கருப்பு சாயம் பூசுவது, செருப்பு மாலை அணிவிப்பது போன்ற வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்தாண்டு சென்னை ராஜ்பவனில் நடந்த திருக்குறள் விழாவில் தமிழ் தெரியாத பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை தவறாக மொழி பெயர்த்துவிட்டார்கள் என்று அறிவுக்கு ஒவ்வாத அவதூறுகருத்து ஒன்றை வெளியிட்டார். திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவித்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் வெளியிட்டு வருகிறார். இதுபோன்ற வன்மத்தின் தொடர்ச்சியாக கடந்த 13ஆம் தேதி நடந்த அரசு விழாவில் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். அதில் திருவள்ளுவர் எழுதாத திருக்குறள் போன்று வடிவமைத்து திருக்குறள் எண் 944 என குறிப்பிட்டு போலி திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது.

திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !

இச்சம்பவத்தை எழுத்துப்பிழையோ, அச்சுப்பிழையோ என சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. இச்செயல் ஒரு நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட சதியாகவே கருதுகிறேன். இதனால், பின்வரும் சந்தேகங்கள் எழுகின்றன.

• ஆளுநரால் வெளியிட்ட திருக்குறளை எழுதியது யார்?

• அவர்கள் 1330 திருக்குறளையும் இதுபோல போலியாக மாற்றி எழுதியிருக்கிறார்களா?

• திருக்குறளின் உண்மையான ஓலைச்சுவடியின் நிலை என்ன?

• கடந்த காலங்களில் ஆளுநரின் அரசு விழாக்களில், சான்றிதழ்களில், அறிக்கைகளில் இதுபோன்று போலி திருக்குறள்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்களா?

தமிழ்நாடு அரசு உடனடியாக இதனை ஆராய குழு ஒன்றை அமைத்து, இதற்கு பின்னால் சதிச்செயல்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறியவேண்டும். உண்மை கண்டறியப் பட்டால் உரியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories