அரசியல்

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை கைவிடவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு CPIM கடிதம் !

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் சில சமூகத்தினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு வலு சேர்க்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளது

பீகாரில் வாக்காளர் பட்டியல்  சிறப்புத் திருத்தத்தை கைவிடவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு CPIM கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகாரில் தேர்தல் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை பாமர மக்களை பாதிக்கும் என்றும், குறிப்பிட்ட சில சமூகத்தினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு வலு சேர்க்கும் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிலோத்பல் பாசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுந்துள்ளது.

அந்த கடிதத்தில், "பீகாரில் தேர்தல் வாக்காளர் பட்டியலில் தீவிரமான முறையில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “வாக்காளர் பட்டியல்களை மறுஆய்வு செய்வது ஒரு சாதாரண மற்றும் வழக்கமான செயல்முறையாக இருந்தாலும், தேர்தல்கள் நடைபெறும் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான /நீக்குவதற்கான பொறுப்பின் பெரும்பகுதியை இந்த திட்டங்கள் வாக்காளர்கள் மீது சுமத்துவதாகத் தெரிகிறது.

கூடுதலாக, கடந்த தேர்தல்களின் போது அக்டோபர்/நவம்பர் மாதங்களில் பீகார் சட்ட மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டதால், உண்மையான தேர்தல்களுக்கு மிக அருகில் இருப்பதால், இந்தப் பயிற்சியின் நேரமும் கவலைக்குரியது. எனவே, பின்வரும் குறிப்பிட்ட காரணங்களுக்காக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறை மற்றும் நடைமுறையை ஆட்சேபணைக்குரியதாக நாங்கள் கருதுகிறோம்.

Nilotpal Basu
Nilotpal Basu

1) தேர்தல் ஆணையம், குறைந்த பட்சம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையாவது நம்பிக்கைக்கு உட்படுத்தி, அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன், திட்டத்தைத் தொடங்குவது குறித்து முறையாகத் தெரிவிக்க கூட்டத்தைக் கூட்டுவதற்குப் பதிலாக, அவர்களின் கருத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும்.

2) மாநிலம் தேர்தலுக்குச் செல்வதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு இவ்வளவு விரிவான நடவடிக்கையை மேற்கொள்வது சூழ்நிலையை மோசமாக்கும் ஆபத்துகள் நிறைந்ததாகும். அத்துடன் இந்த முழுப் பணியையும் முடிப்பதற்கான கால அளவு ஒரு மாதம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

3) தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரியின் பொறுப்பாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருவரின் சொந்த வாக்காளராகும் சட்டப் பூர்வ உரிமைகோரலைச் சரி பார்க்கும் பொறுப்பை எந்தவொரு சாதாரண வாக்காளரின் மீதும் சுமத்த முடியாது.

4) தொகுதி தேர்தல் அதிகாரி, ஏற்கெனவே உள்ள ஒரு வாக்காளருக்கு கணக்கீட்டுப் படிவத்தை வழங்கத் தவறினால், அந்த வாக்காளருக்கு படிவத்தைப் பெறுவதற்கான செயல் முறை பற்றித் தெரியாவிட்டால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண எழுத்தறிவு கூட இல்லாத வாக்காளர்கள் நிறைந்துள்ள நம் நாட்டில் ஒவ்வொரு வாக்காளரும் இணைய அறிவினைப் பெற்று வாக்காளர் படிவங்களைப் பதிவிறக்கம்/பதிவேற்றம் செய்வார்கள் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கக் கூடாது.

பீகாரில் வாக்காளர் பட்டியல்  சிறப்புத் திருத்தத்தை கைவிடவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு CPIM கடிதம் !

5) தற்போதுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வசிப்பிடச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது, தேவையான ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களை தேவையற்ற துன்புறுத்தலுக்கு வழிவகுத்திடும்.

6) பெற்றோரின் சான்றிதழை வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் விஷயங்களை மேலும் சிக்கலாக்கும்.

7) இந்த முழுப் பயிற்சியும் ஏற்கெனவே முன்மொழியப்பட்ட குடிமக்கள் தேசியப் பதிவேட்டில் (NRC) கூறியதைப் போன்றதாகும். ஒரு குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து அவர்களின் வாக்குரிமையை இழக்கச் செய்ய இது பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளது. 2025 ஜூன் 25 அன்று பீகார் தலைமை நிர்வாக அதிகாரி கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்தப் பயிற்சியை எதிர்த்ததாகவும், அதை கைவிட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததாகவும் எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பீகாரில் முன்மொழியப்பட்ட இந்த நடைமுறை கவலையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் தேர்தல் ஆணையம் வரவிருக்கும் பிற தேர்தல்களுக்கும் இதே முறையைப் பின்பற்றும் என்று அறிவித்துள்ளது. எனவே, இந்த நடைமுறை யை கைவிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்"என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories