அரசியல்

பத்திரப்பதிவு ஆவணங்களை திருத்தியதாக புகார்... அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு !

குன்னூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு மீது வழக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்களை திருத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு ஆவணங்களை திருத்தியதாக புகார்... அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகன் திலிப் என்பவர் தனது குடும்ப சொத்தை முத்திரைத்தாள் திருத்தம் செய்து நிலத்தை அபகரித்து விட்டதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் முன்னாள் அதிமுக குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் ராமு அவருடைய சகோதரர் ராஜன் மற்றும் ராஜ்குமார்,ராஜூ,லிங்கியம்மாள்,துரை என்பவரின் வாரிசுகளான தீபு, திலீப், ரஞ்சித் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இவர்கள் உதகையில் உள்ள கோஷி முத்திரைத்தாள் விற்பனையாளரிடம் ரூ.50 மதிப்புள்ள முத்திரைத்தாள்களை 8.2.2012 மற்றும் 22.2.2012 அன்று வாங்கி அந்த முத்திரை தாள்களில் உள்ள தேதியை 31.5.2006 மற்றும் 22.2.2010 என முன்தேதியிட்டு திருத்தம் செய்து அதே முத்திரை தாளில் போலியான ஆவணங்களை தயாரித்து உள்ளனர் என்பதை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் (ந.க.எண் 2342/ஆ4 2023) தெரியவந்தது.

ADMK Ex MLA
ADMK Ex MLA

மேலும், உதகையில் உள்ள மாவட்ட பதிவாளர் முன்னிலையில் நடந்த விசாரணையின் முடிவில் டீ பேக்டரி பெயரில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள முத்திரைத்தாளில் தேதிகள் மாற்றப்பட்டதை விசாரணை அறிக்கையில் உறுதிப்படுத்திய நிலையில், அரசாங்கத்தை ஏமாற்றி போலி முத்திரைத்தாள் பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்தால் மற்றும் தேதியை திருத்தம் செய்து போலியாக ஆவணங்கள் தயாரித்து அந்த ஆவணத்தை வைத்து பதிவு செய்தது அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து முத்திரை தாளில் தேதி மாற்றி போலி முத்திரைத்தாள் தயாரித்தது தொடர்பாக அதிமுக வை சேர்ந்த குன்னூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராமு உட்பட எட்டு பேர் மீது கோத்தகிரி காவல்நிலைய குற்ற எண் 91/2025 US 318(4),336(2),336(3),340(2),r/w61(2)BNS ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories