கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அங்கீகரிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட அறிவியல்பூர்வமான தரவுகள் தேவை என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
இந்நிலையில், கீழடி ஆய்வுகள், ஆறு நூற்றாண்டுகள் பழமையானது என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக, ஆய்வறிஞர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டி times of india ஆங்கில நாளேடு ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வரலாற்று ஆய்வகமான பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில், கீழடி ஆய்வுகள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2017 முதல் 2018 ஆம் ஆண்டு கால அகழ்வாராய்ச்சியில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் 800 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்களின் நகர்ப்புற மற்றும் தொழில்துறை குடியேற்றத்தை சுட்டிக்காட்டுவதாகவும், சங்க காலத்தில் பெரிய செங்கல் கட்டமைப்புகள், நகரமயமாக்கலுக்கு சான்றாக திகழ்வதாகவும் times of india ஆங்கில நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொண்டகை புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒரு மண்டை ஓட்டிலிருந்து 3D தொழில்நுட்பம் மற்றும் மானுடவியல் அளவீடுகளை பயன்படுத்தி ஆய்வு செய்ததில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கீழடி குடியிருப்பில் வாழ்ந்த பண்டைய தமிழர்களின் முகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மண்டை ஓட்டின் அடிப்படையில், அந்த நபரின் வயது, உணவுமுறை, உண்மையான முகத்தை மறுகட்டமைக்கப்படும் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழடியில் காணப்படும் காளைகள், ஆடுகள், பசுக்கள், செம்மறி ஆடுகள் போன்ற விலங்குகளின் எலும்புகளை அமெரிக்காவை சேர்ந்த டெக்கான் கல்லூரி ஆய்வு செய்து வருவதாகவும், இதன்மூலம், கீழடியில் பண்டைய மக்களின் இடம்பெயர்வை அறிந்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
கீழடியில் தோண்டியெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்ட துண்டுகள், எழுத்து வடிவத்தின் தோற்றத்தை தமிழர்களின் 600 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் times of india ஆங்கில நாளேடு கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கற்பனை அடிப்படையிலோ, நம்பிக்கை அடிப்படையிலோ கீழடி அகழாய்வு அறிக்கையை எழுதவில்லை, உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட தொல்லியல் அறிவியல் அடிப்படையிலும், தரவுகளின் அடிப்படையிலும் ஆராய்ச்சி எழுதப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெளிவுப்படுத்தியுள்ளதும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழடி ஆய்வில் 600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமூகத்தையும், கைவினைஞர்களின் சமூகத்தையும் கொண்ட ஒரு நகர்ப்புற குடியிருப்புகளுடன் வாழ்ந்துவந்தது என்பதை காட்டுவதாகவும் அந்த கட்டுரையில் பெருமிதத்துடன் கூறப்பட்டுள்ளது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் அறிக்கைப்படி, சங்க இலக்கியம், வெளிநாட்டு வர்த்தகம், ஆபரணங்கள், ரத்தினக் கற்கள் போன்றவை சங்க இலக்கிய கற்பனைக் கதைகள் இல்லை என்றும் பண்டைய தமிழர்களின் வாழ்ந்த அனுபவத்தை நமக்கு உணர்த்துவதாகவும் times of india ஆங்கில நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வுகள், ஆறு நூற்றாண்டுகள் பழமையானது என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக, ஆய்வறிஞர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டி times of india ஆங்கில நாளேடு ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.