அரசியல்

“உச்சநீதிமன்றத்திற்கே சவால் விடுகிறதா ஒன்றிய அரசு?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“மாநில அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு விதிப்பதை, ஒன்றிய அரசு எதிர்ப்பது ஏன்?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“உச்சநீதிமன்றத்திற்கே சவால் விடுகிறதா ஒன்றிய அரசு?” :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியா என்கிற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டில், மாநிலங்களுக்கான சுயாட்சி உரிமைகளை பெற தமிழ்நாடு தனித்து நின்று போராடி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

அப்படியான நடவடிக்கைகளில், முதன்மை நடவடிக்கையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசால் இயற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க தவிர்த்து வந்ததை கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பையும் பெற்றுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

இதனால், மாநிலங்களுக்கான உரிமை அதிகரித்துள்ளது. ஆனால், அதனை ஏற்றுகொள்ள விரும்பாத ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமைகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பல நிலைகளில் விமர்சித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“உச்சநீதிமன்றத்திற்கே சவால் விடுகிறதா ஒன்றிய அரசு?” :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அதற்கு பதிலடி தரும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் சில குறிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இந்த நடவடிக்கை, உச்சநீதிமன்றத்திற்கு நேரடி சவால் விடுவதாக உள்ளது.

மாநில அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு விதிப்பதை, ஒன்றிய அரசு எதிர்ப்பது ஏன்?

மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் முடக்குவதை சட்டப்பூர்வமாக்க பா.ஜ.க முயற்சிக்கிறதா?

பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை முடக்க நினைக்கிறதா ஒன்றிய அரசு?

ஒன்றிய அரசின் ஏஜெண்டுகளாக செயல்படும் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் முயற்சியை, ஒன்றிய பா.ஜ.க அரசு முன்னெடுத்துள்ளது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு, இறுதி விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கே உள்ளது.

மாநிலங்களுக்கு, இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரப்பகிர்வை சீர்குலைக்கும் நோக்குடன் ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத்திற்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை, மாநில சுயாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதையும் எதிர்த்து தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories