சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தெரிவித்தார் .
இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் " நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய விட்டதற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை பாஜக அரசு பரிசாக கொடுத்தது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு நுழைய விட்டீர்கள். இது வடிவேலுவின் பேக்கிரி நகைச்சுவை போலத்தான். நீட் உனக்கு, மருத்துவக் கல்லூரி எனக்கு என சொல்வது போல பேக்கரி டீலிங் தான் அதிமுக செய்துள்ளது" என்று விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு நுழைந்தது என்பதை குறிப்பிட்டு அமைச்சர் சிவசங்கர் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.