நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ஃப் திருத்த மசோதாவை நிறைவேற்றி, அதை ஒன்றிய பா.ஜ.க அரசு சட்டமாக்கியுள்ளது. இதனை எதிர்த்து ங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உட்பட உச்சநீதிமன்றத்தில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வக்ஃப் சொத்துக்களை பயனாளிகள் தொடர்ந்தாலோ, வக்ஃப் என்று அறிவிக்கப்பட்ட சொத்துக்களையோ, வக்ஃப் அல்லாத சொத்து என வகை மாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்த சட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதோரை உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வக்ஃப் சொத்து மீது தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் திட்டவட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சமூகவலைதளங்களில் ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரிவார் கும்பல்கள் தங்களின் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பாஜக ஐடி விங்கைச்சேர்ந்த வரும், இந்துத்துவா அமைப்பு களின் வெளியுறவுக் கொள்கை யின் அமைப்பாளருமான சின்ஹா தனது சமூகவலைதள பக்கத்தில், “ஷரியா கோர்ட் ஆப் இந்தியா (sharia court of india)” என தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஷரியா என்பது முஸ்லிம் சட்டவாரியம் ஆகும்.
இப்படி வெளிப்படையாகவே உச்சநீதிமன்றத்திற்கு எதிராக பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் பேசி வருகிறது. ஏன் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் கூட உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.