அரசியல்

குப்பைகளை ஒதுக்கி தள்ளும் உலகத்தில் ஆகச் சிறந்த தூய்மை பணியாளர்.. -முதல்வருக்கு நடிகர் சத்யராஜ் புகழாரம்!

குப்பைகளை ஒதுக்கி தள்ளும் உலகத்தில் ஆகச் சிறந்த தூய்மை பணியாளர்.. -முதல்வருக்கு நடிகர் சத்யராஜ் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. இதனால் ஆளுநர்கள் மாநில அரசுகளின் முடிவுகளில் திட்டமிட்டே தலையிட்டு, திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் இழுத்தடித்து வருகிறார்கள். மாநில அரசுகளின் ஜனநாய உரிமைகளில் ஆளுநர்கள் குறுக்கீடு செய்து வருகிறார்கள்.

அப்படிதான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காழ்புணர்ச்சியுடன் நடந்து கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

குப்பைகளை ஒதுக்கி தள்ளும் உலகத்தில் ஆகச் சிறந்த தூய்மை பணியாளர்.. -முதல்வருக்கு நடிகர் சத்யராஜ் புகழாரம்!

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ”மாநில அரசின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட முடியும். அரசுக்கு ஆளுநர் வீண் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. அது மக்களின் நலன்களை பாதிக்கும். உயரதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமாகும். பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதைமீறி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததும் சட்டவிரோதமாகு. ஆளுநர் தனிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லைஉயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களை பின்பற்ற வேண்டும்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்படும் மசோதாக்கள் மீது 3 மாத காலத்திற்குள் ஆளுநர் கட்டாயம் முடிவு எடுக்க வேண்டும். சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும், சில பிரிவுகளில் மூன்று மாதத்திற்குள்லும் ஆளுநர் முடிவு எடுத்தாக வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை ஒதுக்கி தள்ளும் உலகத்தில் ஆகச் சிறந்த தூய்மை பணியாளர்.. -முதல்வருக்கு நடிகர் சத்யராஜ் புகழாரம்!

மு.க.ஸ்டாலின் என்றால் முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என முதல்வரை நான் குறிப்பிட்டதை உச்சநீதிமன்றம் அவர்களுடைய பாணியில் வேந்தர் என உறுதி செய்துள்ளது என்று நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது :

ஒரு கூட்டத்தில் பேசும்போது மு.க.ஸ்டாலின் என்றால் முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் எனக் கூறியிருந்தேன் ஆனால் அதை உச்சநீதிமன்றம் வேந்தர் என்ற வேறு ஒரு பாணியில் உறுதி செய்துவிட்டது. திராவிட இயக்க கொள்கைப்படி எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பதை நாம் மற்றொரு சொல்லாக வேந்தர் என்று சொல்வோம்.

மேலும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் உழைக்கும் வர்க்கத்திற்கு கடைகோடி மக்களுக்காக போராடும் இயக்கம் இந்த திராவிட முன்னேற்றக் கழக இயக்கம். அந்த வகையில் இந்த குப்பைகளை எல்லாம் அருமையாக ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார் நம்முடைய முதல்வர். ஆகவே முதல்வரை உலகத்தில் மிகச் சிறந்த தூய்மை பணியாளர் என்றும் சொல்லலாம்.

உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிசெய்யும் தொழிலாளர்களிடம் நீங்கள் மீண்டும் உங்கள் மாநிலத்திற்கு செல்கிறீர்களா என்று கேட்டால் அதற்கு பதிலாக நான் கேள்விப்பட்டவரை அவர்களுடைய குழந்தைகளை எல்லாம் இங்குள்ள பள்ளியில் படிக்க வைத்து தமிழையும் ஆங்கிலத்தையும் கற்று கொடுக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளில் அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசிக்கொள்கிறார்கள்.

இவ்வளவு சிறப்பான ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கையில் தமிழ்நாட்டில் வாழும் சாதாரண ஒரு மனிதன் என்ற நிலையிலிருந்து முதல்வரை வாழ்த்துகிறேன்.

banner

Related Stories

Related Stories