அரசியல்

தாமதமின்றி நிதி வழங்கப்படுவதை உறுதி செய்யுமா ஒன்றிய அரசு ? - தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி !

தாமதமின்றி நிதி வழங்கப்படுவதை உறுதி செய்யுமா ஒன்றிய அரசு ?  - தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்ட நிதிகளை வழங்குவதில் தாமதம் ஏன்?” மக்களவையில் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவர் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் விவரம் :

தமிழ்நாடு அரசு தனது மாநிலப் பங்கை சரியான நேரத்தில் விடுவித்த போதிலும், ஒன்றிய அரசின் நிதியுதவி அளிக்கும் திட்டங்களான (css) மிஷன் சக்சம் அங்கன்வாடி & போஷன் 2.0 (Saksham Anganwadi) & (Poshan 2.0) & T (Mission Shakti and Mission Vatsalya) போன்றவற்றிற்கான நிதியை விடுவிப்பதில் ஒன்றிய அரசு தாமதம் செய்கிறதா? அப்படியெனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் எனக் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களுக்கு கடைசி நேரத்தில் நிதி வெளியிடுவதின் காரணமாக, செலவழிக்கப்படாத திட்ட நிதியை அடுத்த நிதியாண்டிற்கு எடுத்துசெல்வதை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு நிதி வழங்கும் அட்டவணையை மறுசீரமைக்க பரிசீலிக்கிறதா? அப்படியெனில்,அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினார்.

தாமதமின்றி நிதி வழங்கப்படுவதை உறுதி செய்யுமா ஒன்றிய அரசு ?  - தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி !

நிதி ஆண்டு முடிவில் ஏற்படும் காலதாமதங்களைத் தடுக்க, ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் ஒன்றிய அரசின் பங்கு வெளியிடப்படுவதை உறுதிப்படுத்த அமைச்சகம் எடுத்துள்ள அல்லது எடுக்க முன்மொழியும் நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் சரியான நேரத்தில் தாமதமின்றி நிதி வழங்கப்படுவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு ஏதேனும் செயல்முறை அமைப்புகளை அமைத்துள்ளதா? அப்படியெனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories