அரசியல்

"தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

"தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 10) தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று அவமதித்து பேசினார். இதற்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதன் காரணமாக தனது கருத்தை தர்மேந்திர பிரதான் திரும்பப்பெற்றார்.

இந்த விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

"தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "2024-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!"

2025-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!"

இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.

"இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்வி கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்" எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories