அரசியல்

அனைத்து கட்சிக் கூட்டம்: “தமிழக பிரதிநிதித்துவத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தும் பாஜக” - முதலமைச்சர்!

தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே அபாயமான நடவடிக்கையாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிக் கூட்டம்: “தமிழக பிரதிநிதித்துவத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தும் பாஜக” - முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் விதமாக பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்கும் கட்சிகளை குறிவைத்து மறைமுகமாக தாக்குதல் நடத்துகிறது. அதோடு பாஜக ஆளாத மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்காமலும் வஞ்சித்து வருகிறது.

இந்த சூழலில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக, தற்போது தென் மாநிலங்களை குறிவைத்து தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 39 நாடளுமன்ற தொகுதி இருக்கும் நிலையில், அதை 31-ஆக குறைக்க ஒன்றிய பாஜக அரசு முயன்று வருகிறது.

எனவே நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக ஒன்றிய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ள நிலையில், அனைத்து கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கூட்டியுள்ளார். அரசியல் வேறுபாடுகளையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, கௌரவம் பார்க்காமல் இந்தக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 56 அரசியல் கட்சிகள், அமைப்புகள் பங்கேற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், தவெக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன.

அனைத்து கட்சிக் கூட்டம்: “தமிழக பிரதிநிதித்துவத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தும் பாஜக” - முதலமைச்சர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு :

தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனை உணர்த்தவே அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற கத்தி தென் மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது.

தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தமிழ்நாட்டின் உரிமை பறிக்கும். இது தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும்.

அனைத்து கட்சிக் கூட்டம்: “தமிழக பிரதிநிதித்துவத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தும் பாஜக” - முதலமைச்சர்!

ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு, கூட்டாட்சி கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்துவிடும். தமிழ்நாட்டு பிரதிநிதித்துவம்குறையும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல. தமிழ்நாட்டின் உரிமை சார்ந்தது. தமிழ்நாடு எதிர்கொள்ளும் இந்த முக்கிய பிரச்சனைகளில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஒன்றிய அரசின் சதியை முறியடிக்க வேண்டும்.

சமநீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தினால், இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் குரல் ஒடுக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே அபாயமான நடவடிக்கையாகும். இந்தியாவின் கூட்டாட்சிக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது அரசியல் பிரதிநிதித்துவம் மீதான நேரடி தாக்குதலாகும்.

தமிழ்நாட்டிற்கு தற்போது 39 எம்.பிக்கள் இருக்கும்போதே, நாம் எழுப்புகின்ற குரலை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியாக மாறும்.

banner

Related Stories

Related Stories