அரசியல்

நீதிபதி போன்ற அதிகாரம் மிக்க பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லாதது ஏன் ? - திருமாவளவன் MP கேள்வி !

நீதிபதி போன்ற அதிகாரம் மிக்க பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லாதது ஏன் ? - திருமாவளவன் MP கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்ற வலியுறுத்தியும், கொலிஜியம் தேர்வில் வெளிப்படையாக நடத்த வலியுறுத்தியும் சமூக நீதி வழக்கறிஞர்கள் சார்பாக மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், " அதிகாரம் வாய்த்த பதவிகளில் இட ஒதுக்கீடு என்பதே இல்லை. பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் நியமனங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் இருக்கிற இயக்குனர் போன்ற பதவிகள் என அதிகாரம் வாய்ந்த பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லை. அதிலும் குறிப்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. அதிகாரம் மிக்க இடங்களில் இட ஒதுக்கீடு ஏன் இல்லை என்பதை இதுவரை யாரும் இது குறித்து உரிய விளக்கம் அளிக்கவில்லை. இது மிகப்பெரும் அநீதி.

தனியார் துறைதான் இங்கு பெருமளவில் உள்ளன. அரசுத்துறைகள் மிக சொற்பம்தான். 15 சதவீதம் அரசுத்துறை என எடுத்துக் கொண்டால் 85 சதவீதம் தனியார் துறைகள்தான். ஒன்றிய,மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறைகளில் இட ஒதுக்கீடு , வேலை நியமனங்களில் நாலாம் தர பணிகளில் தான் இட ஒதுக்கீடு கணிசமாக நிரப்பப்படுகிறது. கடைநிலை ஊழியராக இருக்கக்கூடிய பதவி நியமனங்களில் மட்டும் தான் இட ஒதுக்கீடு இருக்கிறது. அந்த இட ஒதுக்கீடும் ஐந்து அல்லது ஆறு சதவீதம் அளவில்தான் நிரப்பப்படுகிறது . உயர் நீதிமன்றம் போன்ற மிக உயர்ந்த பதவிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்று உறுதியாக இருக்கிறார்கள்.

நீதிபதி போன்ற அதிகாரம் மிக்க பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லாதது ஏன் ? - திருமாவளவன் MP கேள்வி !

இதற்காக சமூக நீதி என்பது சாதி அடிப்படையிலானது. அதனால் உயர்ந்த இடங்களில் வர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்படுகிறது. மதவாத அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கையாக வைத்து அதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது தான் எகனாமிக்கில் வீக்கர் செக்சன் என்ற ஒரு பிரிவு. ஒட்டுமொத்தத்தில் நாம் இன்றைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனங்களில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம் .உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களிலும் இந்தியா முழுவதும் இருக்கிற அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் இது நடைமுறைக்கு வரவேண்டும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு யுபிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி ஒரு முறைக்கு பலமுறை முயற்சி எடுத்து அதனை தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி பெற்று அந்த அதிகாரத்திற்கு வருகிறார்கள். ஆனால் நீதிபதிகள் நியமனங்களில் மட்டும் இது போன்ற எந்த நடைமுறையும் தேவையில்லை. கொலிஜியம் மூன்று பேர் கூடி , அரசின் கவனத்திற்கு அனுப்புகிறார்கள். அகில இந்திய அளவில் இருக்கிற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என்கிற குரல் ஜனநாயகத்தின் குரல். இது ஏதோ ஒரு பாதிக்கப்பட்ட சிலரின் குரல் அல்ல. ஜனநாயகர்கள் இருப்பதால் தான் பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிறோம். தற்போது உயர்நீதிமன்றம் என்பதற்கு பதிலாக உயர் சாதி மன்றம் என்று சொல்லக்கூடிய நிலைதான் இருக்கிறது. நியமனங்களில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே சட்டத்தில் திறன் வாய்ந்தவர்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள் சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள் தீர்ப்பு எழுதக்கூடிய வல்லவர்கள் என்று அவர்களே தீர்மானித்துக் கொண்டு இப்படிப்பட்ட அணுகுமுறைகளை கையாளுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories