அரசியல்

நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைப்பு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் - கனிமொழி MP !

ஒன்றிய அரசின் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் என திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைப்பு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் ஒன்றிணைவோம் - கனிமொழி MP !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகையை வெகுவாக குறைந்துள்ள நிலையில், வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனிடையே 2026-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளை ஒன்றிய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு நடைபெற்றால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான நாடாளுமன்ற இடங்கள் வெகுவாக குறையும் சூழல் ஏற்படும். இதனால் தென்மாநிலங்களின் அதிகாரம் வெகுவாக குறைந்து விடும். இதனை குறிப்பிட்டு இந்த இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைப்பு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் ஒன்றிணைவோம் - கனிமொழி MP !

இந்த நிலையில், ஒன்றிய அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் என திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "இந்தியாவின் அடிப்படை கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியையும் முன்னகர்த்தி வரும் பாஜகவின் நீண்ட கால செயல்திட்டம் தான் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு.

பல ஆண்டுகளாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது ஆளும் ஒன்றிய பாஜக அரசு.ஒன்றிய அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories