அரசியல்

பயிற்சி மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்காத 60 மருத்துவக் கல்லூரிகள்! : ஆர்.டி.ஐ சட்டம் வழி வெளிவந்த உண்மை!

இந்திய ஒன்றியத்தில் அமைந்துள்ள சுமார் 60 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்காதது வெளிப்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்காத 60 மருத்துவக் கல்லூரிகள்! : ஆர்.டி.ஐ சட்டம் வழி வெளிவந்த உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவில் மருத்துவம் படிப்பதும், மருத்துவர் ஆவதும் ஒன்றிய பா.ஜ.க ஆட்சிக்கு பின் பலருக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் வழி பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஒன்றிய பாடத்திட்டத்தின் வழி நுழைவுத் தேர்வு நடத்துவது போன்ற வஞ்சிப்புகள் அதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளன.

அவ்வகையில், பெரும் போராட்டத்திற்கு பிறகு மருத்துவத்தில் இணையும் மாணவர்கள், பயிற்சியின் போது தகுந்த ஊதியம் கிடைக்காமல் வஞ்சிக்கப்படுகின்றனர் என்று தகவல் அறியும் சட்டத்தின் வழி வெளிப்பட்டிருக்கிற தரவு மக்களை மேலும் வருத்தமடைய செய்துள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 753 மருத்துவக் கல்லூரிகள் அமையப்பெற்றிருப்பினும், அதில் 555 கல்லூரிகள் தொடர்பான தரவுகளே முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து பெறப்பட்ட தகவலின் வழிதான், 60 மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது.

பயிற்சி மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்காத 60 மருத்துவக் கல்லூரிகள்! : ஆர்.டி.ஐ சட்டம் வழி வெளிவந்த உண்மை!

மீதமிருக்கிற 198 மருத்துவக் கல்லூரிகளின் நிலை மருத்துவர்களின் எதிர்காலத்தை போன்று, கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.

இந்தியாவில் அனைவரும் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதில் உறுதியாக செயல்பட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மருத்துவர்களின் நலனில் இவ்வாறு அலட்சியமாக செயல்படுவது தேசிய அளவில் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்டபோது, டெல்லியில் உள்ள கல்லூரிகளுக்கு அரை நாள் விடுப்பு அளிக்க உத்தரவிடும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மக்களின் உயிரை காக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக உத்தரவிடாதது கடும் அதிருப்தியைதான் ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற வஞ்சிப்புகள் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்க்கும் மக்களுக்கு, ஏமாற்றங்களே அதிகரித்து.

banner

Related Stories

Related Stories