அமலாக்கத் துறை வழக்கு ஒன்றில் குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்ட பின்பும் ஒருவரை அமலாக்கத்துறை சிறையில் வைத்திருந்தது. அவருக்கு ஜாமின் வழங்க மறுத்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் செசன்ஸ் நீதிமன்றம் குற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டது செல்லாது என்று வாதிட்டனர். பின்னர் அது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவை இன்னும் எழுத்து மூலம் வெளியிடவில்லை என்று வாதிட்டனர்.
இந்த வாதங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம் ஒருவரை சிறையில் வைத்திருப்பதற்காகவே பணப்பரிவர்த்தனை சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக அமலாக்கத்துறை வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
அதோடு நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சம்பந்தப்பட்ட நபரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் வைத்திருந்ததை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை வாதங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம் உடனடியாக ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.