அரசியல்

வேட்பாளர் முதல் செயலாளர் வரை : திமுகவில் இணைந்த முக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் !

அரியலுரில் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

வேட்பாளர் முதல் செயலாளர் வரை :  திமுகவில் இணைந்த முக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தந்தை பெரியாரை சீமான் விமர்சித்து பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதோடு பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகளுக்கு தொடர்புள்ளவர்கள் சீமானின் பொய்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அதே போல நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலுரில் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் 2021 ஆம் ஆண்டின் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் மண்டல செயலாளர் நீல.மகாலிங்கம் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

வேட்பாளர் முதல் செயலாளர் வரை :  திமுகவில் இணைந்த முக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் !

திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விவரம் :

அரியலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன் ,கலைச்செல்வன்.

மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஐயப்பன்.

மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் விஜயகுமார்.

அரியலூர் மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் அஜித் குமார்.

தொகுதி செயலாளர் கமலக்கண்ணன்.

ஜெயங்கொண்டம் தொகுதி பொருளாளர் டென்னிஸ் ஜெபஸ்டின், துணைத் தலைவர் வினோத்.

அரியலூர் தொகுதி வீர தமிழர் முன்னணி தொகுதி செயலாளர் மணிவேல், கிளைச் செயலாளர் விஷால்.

banner

Related Stories

Related Stories