அரசியல்

விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் ’கலைஞர் கைவினைத் திட்ட’மும் ஒன்றா? : TN Fact Check விளக்கம்!

கலைஞர் கைவினைத் திட்டத்தின் தனித்துவத்தை விளக்கியுள்ளது TN Fact Check.

விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் ’கலைஞர் கைவினைத் திட்ட’மும் ஒன்றா? : TN Fact Check விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டத்தை, ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்துடன் ஒப்பிட்டு பலர் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், கலைஞர் கைவினைத் திட்டத்தின் தனித்துவத்தை விளக்கியுள்ளது TN Fact Check.

இது குறித்து TN Fact Check-ன் சமூக வலைதளப் பக்கத்தில், “விஸ்வகர்மா திட்டத்தில் இணைய உள்ள விதிகளில் “குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய தொழில் செய்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதே வேளையில் விண்ணப்பிக்கும் முன்பே அத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என்று உள்ளது. மேலும், அடிப்படை பயிற்சியும், உயர்நிலை பயிற்சியும் வழங்குதல், அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குதல், கடன் உதவிகளை வழங்குதல் ஆகியவையே இத்திட்டத்தின் செயல்பாடுகள்.

இது, தங்கள் குடும்பத் தொழிலில் 18 வயதிருக்கு முன்பே ஈடுபடத் தூண்டும் வகையில் உள்ளது, இது மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைத்து குலத் தொழிலில் தள்ளும் என்பதால் இதில் தமிழ்நாடு அரசு இணையவில்லை.

விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் ’கலைஞர் கைவினைத் திட்ட’மும் ஒன்றா? : TN Fact Check விளக்கம்!

குலத்தொழில் ஊக்குவிப்பாக இல்லாமல், மாணவர்கள் உயர்கல்வி கனவைச் சிதைக்காமல் அதே நேரத்தில் இவ்வகை தொழில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என ,

'கலைஞர் கைவினைத் திட்டம்' முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் இணைவதற்கான வயது குறைந்தபட்ச வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப / வகுப்பு அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் , வகுப்பு அடிப்படையில் எனச் சுருங்காமல், தொழில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

இன்று தமிழ்நாடு அரசு சார்பாக வந்த விளம்பரத்தில் விண்ணப்பிக்கத் தகுதி என்பதில் 35 வயது நிரம்பியவர்களுக்கு என்றும் , எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த இரண்டு திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories