தமிழ்நாடு

“திருவண்ணாமலையில் கிரிவலம் நிச்சயம் நடைபெறும்” - பேரவையில் அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்!

திருவண்ணாமலையில் இந்த ஆண்டு கிரிவலம் நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

“திருவண்ணாமலையில் கிரிவலம் நிச்சயம் நடைபெறும்” - பேரவையில் அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் திருக் கார்த்திகையை முன்னிட்டு, திருவண்ணமாலை அண்ணாமலையார் கோயிலில் மகர ஜோதி ஏற்றப்படுவது வழக்கம். இந்த தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதுமின்றி, நாடு முழுவதுமலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து மகிழ்வர். அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13-ம் தேதி வருகிறது.

இந்த சூழலில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலையில் இந்த ஆண்டு கிரிவலம் நடைபெறுமா என்று கேள்வியெழுந்த நிலையில், நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று (டிச.10) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

“திருவண்ணாமலையில் கிரிவலம் நிச்சயம் நடைபெறும்” - பேரவையில் அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்!

அப்போது இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு,

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொண்டாடுவது காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டுதான் கடந்த அக்டோபர் மாதம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிவல பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு 6 கூட்டங்கள் நடைப்பெற்றது.

தொடர்ந்து சமீபத்தில் ஏற்பட்ட புயல் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இந்த பகுதியை போர்க்கால அடிப்படையில் கையாளப்பட்டது. இந்த தீபத்திருவிழா இந்த ஆண்டு தடை படக்கூடாது என்பதால் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுனர் உள்ளிட்ட 8 பேர் குழுவினர் மலை மீது ஏறிச் சென்று, கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தனர்.

இதற்கான ஆய்வறிக்கைக்கு பின்னர், 450 கிலோ நெய்யும், 350 கிலோ கொப்பரையும் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். எனவே இதற்கு ஏற்றாற்போல் மனித சக்திகளை பயன்படுத்தி, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை உச்சியின் மீது இந்த ஆண்டும் நிச்சயம் தீபம் எரியும்.

இதன் மூலம் இந்த ஆண்டு கிரிவலம் நிச்சயம் நடைபெறும் என்பது தெரிகிறது. எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் மக்கள் பணியை திராவிட மாடல் அரசு சிறப்பாக செய்து வருகிறது.

banner

Related Stories

Related Stories