அரசியல்

”அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்” : சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்!

தேசிய தேர்வு முகமையை ரத்து செய்ய வேண்டும் என சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

”அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்” : சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது. தற்போது நீட் தேர்வு தகுதி தேர்வு என்று கூறினார்கள். ஆனால் இப்போது நீட் தேர்வு வியாபாரமாக மாறிவிட்டது.

அண்மையில் நடந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துள்ளது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு உள்ளதாக எழுந்த புகார்களை அடுத்து 1563 மாணவர்களுக்கு மறுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நீட் குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் UGC-NET,CUET தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமையை ரத்து செய்ய வேண்டும் என சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ள சீத்தாராம் யெச்சூரி, ”நீட் முறைகேடு, UGC-NET தேர்வு ரத்து செய்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை. இதற்கு பா.ஜ.க அரசாங்கமே முழுப்பொறுப்பு. தேசிய தேர்வு முகமையை ரத்து செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories