அரசியல்

பேச்சுப்பொருளான ‘பா.ஜ.க - தெலுங்கு தேசத்தின் கடந்த கால முரண்’ : சுட்டிக்காட்டும் தலைவர்கள்!

இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வரும், மோடி, அமித்ஷா - சந்திரபாபு நாயுடு முரண்!

பேச்சுப்பொருளான ‘பா.ஜ.க - தெலுங்கு தேசத்தின் கடந்த கால முரண்’ : சுட்டிக்காட்டும் தலைவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது, ஒன்றிய பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தவர் தெலுங்கு தேச கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான சந்திரபாபு நாயுடு.

அதனால், அப்போதைய பா.ஜ.க தலைவரும், தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, பதிலுக்கு சந்திரபாபு நாயுடுவையும் கடுமையாக விமர்சித்தார்.

அவ்வாறு, அவர்கள் மாறி மாறி தங்களை தாக்கிக்கொண்ட முரண் பேச்சுகள், தற்பொது மிகப்பெரிய பேச்சுப்பொருளாக உருவெடுத்துள்ளது.

அவ்வகையில், “இந்திய அமைப்பையே சிதைத்துள்ளார் மோடி. அவரது ஆட்சியில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் என எந்த அமைப்பையும், பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்ற முடியாது” என 2019ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் போது சந்திரபாபு நாயுடு, தனது X தளத்தில் பதிவிட்டதை சுட்டிக்கட்டி, ‘ஒப்புகொள்கிறேன்’(Agreed) என யூடூபர் துருவ் ரதீயும்,

பேச்சுப்பொருளான ‘பா.ஜ.க - தெலுங்கு தேசத்தின் கடந்த கால முரண்’ : சுட்டிக்காட்டும் தலைவர்கள்!

அவரைத் தொடர்ந்து, " 'இந்திய வரலாற்றிலேயே சந்திரபாபு நாயுடுதான் ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பவாதி. அவருக்கு பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் கதவு எப்போதும் மூடியே இருக்கும்.' என்று அமித்ஷா அவமானப்படுத்திய பிறகும் மோடியுடன் கூட்டணி வைக்க சந்திரபாபு நாயுடு சம்மதிப்பாரா?" என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசனும், தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே, 2019-ல் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, “2014 நடாளுமன்ற தேர்தலில் மாநில நலனுக்காகத்தான் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளித்தது.

ஆனால் அதிலும் எந்தப் பயனும் இல்லை.பா.ஜ.க ஆட்சியால் ஆந்திராவுக்கு இதுவரை எந்த நல்லதும் நடக்கவில்லை, எந்த நீதியும் கிடைக்கவில்லை” என பேசிய காணொளியும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இது போன்ற சூழல் நிலவினாலும், சந்திரபாபு நாயுடுவை விட்டுவிட்டால் அல்லது சந்திரபாபு நாயுடு விலகிவிட்டால், எங்கு பா.ஜ.க ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில்,

NDA கூட்டணி கூட்டத்தில் கூட, தனக்கு பக்கத்து இருக்கையை கொடுத்து, இருக்கப் பிடித்து வருகிறார் மோடி.

banner

Related Stories

Related Stories