அரசியல்

வேலைக்காரன் - காவலாளி - கடவுள் : தேர்தலுக்கு தேர்தல் மாறும் மோடியின் அவதாரங்கள்!

2014-ல் ஆட்சியை பிடித்த பா.ஜ.க, மோடியின் பிம்பத்தை காலத்திற்கேற்ப மாற்றி வருவது கடும் சர்ச்சையாகியுள்ளது.

வேலைக்காரன் - காவலாளி - கடவுள் : தேர்தலுக்கு தேர்தல் மாறும் மோடியின் அவதாரங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2004 முதல் 2014 வரை, ஒன்றிய காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, நாட்டில் பல சிக்கல்கள் எழுவதாகவும், அச்சிக்கல்களை உங்கள் (மக்கள்) வேலைக்காரனாக இருந்து மாற்றி சரிசெய்வேன் என்றும், தொடங்கிய மோடியின் பயணம்,

காலப்போக்கில், மக்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மாற்றம் கண்டு, காவலாளியாக மாறி, தற்போது கடவுளாக உருவெடுத்துள்ளது.

அவ்வாறு, முந்தைய காவலாளியும், தற்போதைய கடவுளுமான மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செய்த உண்மை மாற்றம் என்னவென்றால், 2004 - 2014 வரை இருந்த ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த சிக்கல்கள், 2014 - தற்போது வரை ஆட்சி செய்துவரும் ஒன்றிய பா.ஜ.க.வின் காலத்தில் எழுந்துள்ள சிக்கல்களை ஒப்பிடுகையில், ஒன்றுமே இல்லை என்பது தான்.

அது, விலைவாசியாக இருந்தாலும் சரி, வேலைவாய்ப்பின்மை விகிதமாக இருந்தாலும் சரி, உலக பட்டினி தரவரிசையில் இந்தியா வகித்து வரும் இடமாக இருந்தாலும் சரி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் இந்தியாவின் நிலை என்றாலும் சரி, வரி ஏய்பு என்றாலும் சரி, தற்கொலை விகிதம் என்றாலும் சரி, பா.ஜ.க ஏற்படுத்தியுள்ள இடர்பாடுகளை, வேறு யாரும் இதைவிட சரியாக செய்து விட முடியாது என்பதே, கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி உணர்த்தியுள்ளது.

எனினும், பா.ஜ.க இது போன்ற எண்ணற்ற இடர்பாடுகளை உருவாக்கி வரும் சூழலிலும், பா.ஜ.க.விற்கு மக்களிடையெ சிறிதளவு ஆதரவு ஒட்டிக்கொண்டிருப்பதற்கு காரணம், மதத்தின் பெயரால் மட்டுமே என்பது, ராமர் கோவிலின் வழியே வெளிப்பட்டது.

வேலைக்காரன் - காவலாளி - கடவுள் : தேர்தலுக்கு தேர்தல் மாறும் மோடியின் அவதாரங்கள்!

ஆனால், அந்த மத அரசியல், தற்போது ஒரு கடவுளையே உருவாக்கி விட்டது என்பது தான், இந்திய அரசியலில் மிகப்பெரிய விமர்சனமாக எழுந்துள்ளது.

ராமரையும், பாபரையும் வேறுபடுத்தி, இஸ்லாமியர்களை ஊடுருவி வந்தவர்கள் என அடையாளப்படுத்தி, இந்து அல்லாதவர்கள், இந்திய குடிமக்களே இல்லை என்னும் அளவிற்கு, பா.ஜ.க மேற்கொண்ட பொய் பிரச்சாரங்கள்,

மக்களை தவறாக வழிநடத்த ஏதுவாக இருக்கிறது என்று உணர்ந்த பா.ஜ.க, தற்போது, ‘மோடி தான் கடவுள்’, ‘கடவுள்களின் அரசரே மோடி தான்’ என தங்களின் வாய் வந்த போக்கிற்கு அடித்துவிட தொடங்கியுள்ளது, உலக அரங்கில் இந்திய அரசியல் மீதான பார்வையை தாழ்த்தியுள்ளது.

இதனை மறுக்கும் இடத்தில், எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் இருந்தாலும், பா.ஜ.க.வின் பொய்கள் மட்டும் குறைந்தபாடில்லை.

இதனிடையே, 10 ஆண்டுகால ஆட்சியே, பா.ஜ.க.வை உலகின் பணக்கார கட்சியாகவும், மோடியை கடவுளாகவும் மாற்றியுள்ளது என்றால், மேலும் பா.ஜ.க ஆட்சி செய்ய நேர்ந்தால், என்னென்ன இன்னல்களை மக்கள் காதில் போட்டுக்கொள்ள வேண்டுமோ என்றும், மக்களின் உரிமை தான் மிஞ்சுமோ என்றுமான அச்சங்கள் மக்களிடையே வெளிப்பட தொடங்கியுள்ளன.

ஆனால், அது போன்ற அச்சங்களை தவிர்க்கும் வகையில், இந்தியா கூட்டணி உண்டாக்கியிருக்கிற நம்பிக்கையால், மக்கள் திரள் இந்தியா கூட்டணி பக்கம் திரும்புவதும், மோடி கூட்டங்களில் காலி நாற்காலிகளுடன் காற்று வீசி வருவதும், அண்மையில் காணப்பட்டு வருவது, விடுதலை நம்பிக்கையை மக்கள் மனதில் ஆழ்த்தி, தேர்தல் முடிவுகளை மகிழ்வுடன் எதிர்பார்க்க உந்துதலாக அமைந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories