அரசியல்

இந்தியாவில் அதிகரிக்கும் இணைய முடக்கம் : Access Now மற்றும் #KeepItOn வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

போர் நிகழும் நாடுகளை விட, அதிகப்படியான இணைய முடக்கம் நிகழும் நாடு என்ற அவப்பெயரை இந்தியாவிற்கு பெற்று தந்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்தியாவில் அதிகரிக்கும் இணைய முடக்கம் : Access Now மற்றும் #KeepItOn வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

Access Now மற்றும் #KeepItOn தன்னார்வ அமைப்புகள், உலகில் இணைய முடக்கங்கள் அரங்கேறுவதற்கு எதிரான விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வருகின்றன.

அவ்வகையில் #KeepItOn அமைப்பு, கடந்த 2016ஆம் ஆண்டு முதல், எந்தெந்த நாடுகளில் அதிகப்படியான இணைய முடக்கங்கள் அரங்கேறி வருகின்றன என்பதனை பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2023ஆம் ஆண்டிற்கான இணைய முடக்கம் குறித்த, தரவரிசை அறிக்கையையும் தற்போது வெளியிட்டுள்ளது #KeepItOn அமைப்பு.

அதன்படி, 2016ஆம் ஆண்டு 27 நாடுகளில் இணைய முடக்கம் அரங்கேறியது என்றும், நாடுகளின் எண்ணிக்கை ஆண்டுகள் நகர நகர கூடியும், குறைந்தும் வந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு 39 நாடுகளில் இணைய முடக்கம் அமல்படுத்தப்பட்டது என்ற தகவலை வெளியிட்டுள்ளதுது.

இதில் அதிர்ச்சடையும் வகையில் இடம்பெற்ற தகவல் என்னவென்றால், ஆண்டாண்டு, இணைய முடக்கம் செய்யும் நாடுகளின் எண்ணிக்கை கூடி குறைந்தாலும், இந்தியா மட்டும் பட்டியலில் தன்னை தக்கவைத்த வண்ணமே இருந்து வந்துள்ளது.

குறிப்பாக பட்டியலில், கடந்த 8 ஆண்டுகளாக முதல் இடத்தை விட்டுத்தராத நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. அவ்வாறு கடந்த 2016ஆம் ஆண்டு 30 முறை இணைய முடக்கம் செய்த ஒன்றிய பா.ஜ.க அரசு, கடந்த 2023ஆம் ஆண்டு 116 முறை இணைய முடக்கம் செய்துள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் இணைய முடக்கம் : Access Now மற்றும் #KeepItOn வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

போர் நடந்து கொண்டிருக்கும், உக்ரைன், பாலஸ்தீனத்தில் கூட, 8 முதல் 16 முறை தான் இணைய முடக்கம் செய்யப்பட்டுள்ளன என்ற தகவலும் இவ்வறிக்கையின் வழி அம்பலமாகியுள்ளது.

இதனால், கடும் சினத்திற்குள்ளான பலரும், “இந்திய நிலங்களை அபகரிக்கும் சீன அரசை தட்டிக்கேட்க திராணியற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு, அப்பாவி மக்களின் அடிப்படை உரிமையை சூறையாடி வருகிறது” என தங்களது கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதிலும், இணைய முடக்கம் அமல்படுத்தப்பட காரணங்களாக, #KeepItOn அமைப்பு வகுத்திருக்கிற, ‘கலவரம், போராட்டம், தேர்வு, தேர்தல்’ என்கிற அனைத்து பிரிவுகளிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதில், குறிப்பிட்டு கூறும் மாநிலங்களாக, மணிப்பூரிலும், பஞ்சாப்பிலும் அதிகளவில் இணைய முடக்கம் செய்யப்பட்டதும், தெளிவடைந்துள்ளது.

மணிப்பூரில், இணைய முடக்கம் மட்டுமல்லாமல், நீண்டகால மின்வெட்டுகளும் அமலில் இருக்கும் நிலையில்,‘போர் அச்சுறுத்தல் இல்லாத நாடாக இருக்கின்ற போதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற எண்ணத்தை மறந்து, ஒன்றிய பா.ஜ.க அரசு, தன் நாட்டு மக்களையே எதிரி போல கையாள்வது கடும் கண்டனத்திற்குள்ளானது’ என்ற பதிவுகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories