அரசியல்

கேள்வியும் நானே, பதிலும் நானே : மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணல்கள், வெற்று பேச்சுகள்!

மோடி தந்த 41 நேர்காணல்களும் பொய்களால் நிறைந்தவை என்பதால், ராகுல் காந்தியுடன் தருக்கமிட பின்வாங்குகிறாரா?

கேள்வியும்  நானே, பதிலும் நானே : மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணல்கள், வெற்று பேச்சுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற தேர்தல் மும்முரமாக நடந்து வரும் சூழலில், கடந்த மார்ச் 31 முதல் மே 14 வரை, 41 நேர்காணல்களை தந்துள்ளார் மோடி.

ஆனால், 41 நேர்காணல்களில் இடம்பெற்றிருப்பது, நாட்டை முன்னேற்றி செல்கிற கருத்துகளோ, மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களை மீட்டெடுக்கும் திட்டங்களோ, அல்லது மோடியால் முன்மொழியப்படும் வெறுப்பு பேச்சுகள் குறித்த கேள்விகளோ இல்லை.

மாற்றாக, பிரச்சார மேடைகளில் பேசுவது போன்ற மோடியின் பொய்களும், சில பல நாடகங்களும் மட்டுமே நேர்காணல்களின் உட்கருத்தாய் அமைந்துள்ளன.

கேமரா ரோல் என்றதும், கண்ணீர் விடுவதும், ‘இஸ்லாமியர்களை வேறுபிரித்து பேசினால், நான் பொது வாழ்வில் இருக்கவே தகுதியவற்றவன்’ என்ற வாய்க்கூசாத பொய்களுமே அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

கேள்வியும்  நானே, பதிலும் நானே : மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணல்கள், வெற்று பேச்சுகள்!

இதனை சகித்துக்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே, நேர்காணல் தந்து வருகிறார் மோடி.

காரணம், அவர்கள் தான் உண்மை சரிபார்த்து முறையிட மாட்டார்கள். மோடியின் நாடகங்களை கலைக்கும் வகையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க மாட்டார்கள். கேள்விகளுக்கு விடை கிடைக்காவிட்டாலும், கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாத விடையை மோடி தந்தாலும், கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே.

அதில் வெகு சிலர் மட்டுமே, மணிப்பூர் கலவரம், தேர்தல் பத்திரம், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு குறித்து கேள்வி எழுப்பினர். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த, பா.ஜ.க கூட்டணி மக்களவை வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து, மூன்றே நேர்காணலில் தான் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல தேசிய சிக்கல்களுக்கு எதிராக கேள்விகளே எழுப்பப்படவில்லை.

எனினும், கேட்கப்பட்ட கேள்விகளுக்காவது சரியான விடை கொடுத்தாரா மோடி என்றால், அதுவும் இல்லை.

கேட்டது ஒன்று, கிடைத்தது மற்றொன்று என்பது போல, தனக்கேற்ற வகையில், வழக்கம் போல இல்லாத பல சிக்கல்களை பேசி, அதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று பழிசூட்டும் வேலையையே செய்தார் மோடி.

கேள்வியும்  நானே, பதிலும் நானே : மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணல்கள், வெற்று பேச்சுகள்!

இதற்கு நேர்காணல் செய்த பத்திரிகையாளர்களும், இடைமறித்து, மோடியின் பேச்சை உண்மையுடன் ஒப்பிட்டு தருக்கமிடவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காவிட்டாலும், அது குறித்து கவலை கொள்ளாமல், மோடி கூறுவது தான் விடை, மோடி பேசுவது தான் உண்மை என்பது போல நேர்காணல் செய்பவர்கள் என்பதை மறந்து பார்வையாளர்களாக தங்களை அமைத்து கொண்டனர்.

இதனால், மணிக்கணக்கில் பதிவான மோடியின் காணொளிகள், பொய்களால் மட்டுமே நிரம்பியிருந்ததால், அதனை காணவும் மக்கள் ஈடுபாடு கொள்ளவில்லை.

இதன் வழி, மோடியின் சராசரி பார்வையாளர்களும், தற்போது வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது.

அதே சூழலில், சுமார் 41 நேர்காணல் தர நேரம் இருக்கிற மோடிக்கு, ராகுல் காந்தியிடம் தருக்கமிட நேரமில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சலிக்காமல் பேசப்படும் பொய்கள் அம்பலப்பட்டுவிடும் என்ற பயம் தான் காரணமா என்ற கேள்வியும் மறுபக்கம் வலுக்கத்தொடங்கியுள்ளது.

எத்தனை கேள்விகள், கண்டனங்கள் எழுந்தாலும், ராகுல் காந்தியுடன் தருக்கமிடுவது குறித்து, தெரியாமல் கூட வாய் திறக்க மறுத்து அல்லது பயந்து வருகிறார் மோடி.

banner

Related Stories

Related Stories