தமிழ்நாடு

“மோடியும், அமித்ஷாவும் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்...” - கெடு விதித்த செல்வப்பெருந்தகை !

தமிழர்கள் குறித்து அவதுறாக பேசிய விவகாரம் தொடர்பாக மோடியும், அமித்ஷாவும் 1வாரத்திற்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“மோடியும், அமித்ஷாவும் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்...” - கெடு விதித்த செல்வப்பெருந்தகை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழர்கள் குறித்து அவதுறாக பேசிய விவகாரம் தொடர்பாகமோடியும், அமித்ஷாவும் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று செல்வப் பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “தமிழர்களை திருடர்கள் என்று மோடியும், தமிழர்கள் ஒடிசாவை ஆளலாமா? என்று அமித்ஷாவும் தொடர்ந்து வெறுப்பு அரசியலை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு புறம்பாக பேசி வருகிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் வேளையில் ஈடுபட்டு வரும் அவர்கள், தமிழர்களை திருடர்கள் என்று சொல்வது கடும் கண்டனத்திற்குரியது.

“மோடியும், அமித்ஷாவும் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்...” - கெடு விதித்த செல்வப்பெருந்தகை !

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்திற்கு ஏற்றவாறு அநாகரிகமாக பேசி வருகிறார்கள் பாஜகவினர். தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியத்தை பற்றி பேசுகிறார். எவ்வளவு பெரிய சந்தரப்பவதி மோடி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்...

அதேபோல் தமிழகத்தை சார்ந்தவர் ஒடிசாவை ஆளலாமா? என அமித்ஷா பேசுகிறார். அமித்ஷாவிற்கு வரலாறு தெரியாது, தமிழர் சோழ அரசாட்சியில் நாடு கடந்து ஆட்சி செய்துள்ளனர். தொடர்ந்து வெறுப்பு அரசியலை பேசி வந்தாலும் தேர்தல் ஆணையம் எதுவும் செய்யாமல் எப்போதும் போல் கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டுள்ளது. எப்போது தேர்தல் ஆணையம் விழித்து கொள்ளும் என தெரியவில்லை.

“மோடியும், அமித்ஷாவும் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்...” - கெடு விதித்த செல்வப்பெருந்தகை !

உலகில் 6 மொழிக்கு மட்டுமே எழுத்து மொழி உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மொழி தமிழ் மொழி. அறிவியல் ரீதியாக 3500 ஆண்டுகள் பழைமையான மொழி தமிழ் என சொல்லும் நேரத்தில், வரலாறு தெரியாமல் மோடி மற்றும் அமித்ஷா பேசுகிறார்கள். தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் குறித்து இழிவாக பாஜக பேசினால், தமிழகத்தில் பாஜக இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு இடமாக பாஜகவை எதிர்த்து போராடி வேண்டிய சூழல் இருக்கும்.

இப்படி ஒரு இழிவான பிரதமரை இந்தியாவும் கண்டது இல்லை, உலகமும் கண்டது இல்லை. ஒரு வாரத்தில் அமித்ஷா மற்றும் மோடி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் பாஜக அலுவலகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முற்றுகையிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழர்களை திருடர்கள் என்ற விதத்தில் மோடி பேசியதற்கு முதலமைச்சர் உள்பட தமிழ்நாட்டு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories