அரசியல்

மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!

இந்து - இஸ்லாமியர்களுக்கிடையே பிரிவினையை அதிகரித்துவிட்டு, தற்போது வடக்கு - தெற்கு பிரிவினையை தூண்ட தொடங்கியுள்ளார் மோடி.

மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

“அது வேற வாய், இது வேற வாய்” என்பதற்கு, மோடியை விட உகந்தவர் யாரும் இருக்க இயலாது என மோடியின் தேர்தல் பிரச்சார பேச்சுகளும், ஊடகங்களுக்கு தரும் நேர்காணல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒரு பேச்சும், இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு பேச்சும், தென் மாநிலங்களில் ஒரு பேச்சும், வட மாநிலங்களில் ஒரு பேச்சும், அவ்வப்போது முதலை கண்ணீர்களும், என மோடியின் நாடகத் திறமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

அவ்வகையில் மோடி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மேற்கொண்ட பிரச்சாரங்களில், இஸ்லாமியர்கள் நாட்டின் சொத்துகளை எடுத்துக்கொள்வார்கள், OBC இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்கள் பறித்துக்கொள்கின்றனர், இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள், இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என வாய் வந்த போக்கிற்கு அளந்துவிட்ட பிறகு,

தற்போது ஊடகங்களுக்கு தரக்கூடிய நேர்காணல்களில், “இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்கும் விதமாக, நான் என்றும் பேசியதில்லை. இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசவில்லை. நான் வந்தேறிகள் என குறிப்பிட்டது இஸ்லாமியர்களை அல்ல. அவ்வாறு நான் பேசினால், பிரதமராக இருக்கவும், பொது வாழ்வில் இருக்கவும் தகுதியற்றவனாகிவிடுவேன்” என மழுப்பத்தொடங்கியுள்ளார்.

மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-

அது போலவே, தென் மாநிலங்களுக்கு பிரச்சாரம் வந்தால், மதப்பிளவு பிரச்சாரம் வேகாது என்பதற்காக, இங்குள்ள ஆளும் கட்சிகளை விமர்சித்துக்கொண்டு, இங்குள்ள எதிர்க்கட்சிகளை பயன்படுத்திக்கொண்டு, சில நேரங்களில் பேச்சையே தவிர்த்துக்கொண்டு, ரோட் ஷோக்களில் மட்டுமே வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், இஸ்லாமிய எதிர்ப்பினால், வாக்குகளை இழந்த மோடி, தற்போது, ‘வடக்கு - தெற்கு’ என புது சிக்கலை, உருவாக்கி வருகிறார்.

அதன்படி, உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, “காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் தெற்கில் சென்று, உத்தரப் பிரதெசம் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த மக்கள் குறித்து அவமதிப்பாக பேசி வருகின்றனர்” என புது புரளியை விட்டடித்துள்ளார்.

அந்த புரளியையும் சரியாக, தென் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவுற்ற பின் முன்மொழிந்துள்ளார் மோடி.

இதற்கு, தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வருவதுடன், மோடியின் இது போன்ற பேச்சுகள் யாரை ஏமாற்றுவதற்கு என மக்கள் சிரிக்கவும் தொடங்கியுள்ளனர்.

மோடியின் பேச்சை அவரே நம்ப மாட்டார் என்றும், அவரது முந்தைய பேச்சுகளை, தற்போதைய பேச்சுடன் ஒப்பிட்டு, மீம்களும் பல பகிரப்பட்டு வருகின்றன.

எனினும், அவை எவற்றையும் பொருட்படுத்தாது, தனது நாடக வேலைகளை தொடர்ந்து வருகிறார் மோடி.

banner

Related Stories

Related Stories