அரசியல்

மோடி விதவிதமாக அணியும் விலையுயர்ந்த கோர்ட், காலணிகளை வாங்கி தருவது யார் ? - ராகுல் காந்தி கேள்வி !

ரே பரேலி தொகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி லட்சங்களில் செலவு செய்து ஆடை அணிவது குறித்து விமர்சித்துள்ளார்.

மோடி விதவிதமாக அணியும் விலையுயர்ந்த கோர்ட், காலணிகளை வாங்கி தருவது யார் ? - ராகுல் காந்தி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரே அணியாக தேர்தலை சந்திக்கின்றன. இதனால் பாஜக கடும் அச்சத்தில் உள்ளது. மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரை ராகுல் காந்தி கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் நிலையில், ராகுல் காந்திக்காக அவரது தங்கை பிரியங்கா காந்தி ரே பரேலி தொகுதிஜியில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த சூழலில் ராகுல் காந்தி நேற்று ரே பரேலியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார்.

மோடி விதவிதமாக அணியும் விலையுயர்ந்த கோர்ட், காலணிகளை வாங்கி தருவது யார் ? - ராகுல் காந்தி கேள்வி !

அப்போது பேசிய அவர், "70 கோடி மக்களின் பணத்தை 22 பேர் மட்டுமே உடைமையாக வைத்துள்ளனர். அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. பிரதமர் மோடி ஒரு நாளில் மூன்று முறை, ஒரு மாதத்துக்கு 90 முறை என கோட் - சூட்டை மாற்றுகிறார்.

அவர் அணியும் ஒரு கோட்டின் விலை 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும். பிரதமரின் சம்பளம் ஒன்றரை லட்சம்தான். இந்த நிலையில் இவற்றையெல்லாம் மோடிக்கு யார் வாங்கித் தருகிறார்கள்? அவர் அணியும் விலை உயர்ந்த காலணிகளை யார் வாங்கித் தருகிறார்கள்? இவற்றை ஊடகங்கள் கேட்காதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories