அரசியல்

#சந்தேஷ்காளி : பெண்ணை மிரட்டி பாலியல் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வைத்த பாஜக : வெளிவந்த வாக்குமூலம் !

பாஜகவினர் தன்னை மிரட்டி பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

#சந்தேஷ்காளி : பெண்ணை மிரட்டி பாலியல் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வைத்த பாஜக : வெளிவந்த வாக்குமூலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் சந்தேஷ்காளி என்ற கிராமத்தில் நில அபகரிப்பு செய்ததாகவும், அதோடு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த போராட்டத்தை கையில் எடுத்த பாஜக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் ஆயுதமாக இதனை பயன்படுத்தியது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்லாத பிரதமர் மோடி இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்களை நேரில் சந்தித்தார். அதோடு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட ரேகா பத்ரா என்பவரை பாசிர்ஹத் மக்களவைத் தொகுதி வேட்பாளராகவும் பாஜக களமிறக்கியது.

#சந்தேஷ்காளி : பெண்ணை மிரட்டி பாலியல் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வைத்த பாஜக : வெளிவந்த வாக்குமூலம் !

இந்த நிலையில், பாஜகவினர் தன்னை மிரட்டி வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட கூறியதோடு, பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரில், உள்ளூர் பாஜக நிர்வாகி இலவச வீடு வழங்கும் திட்டத்தில் என் பெயரை சேர்ப்பதற்காக என்னுடைய கையொப்பத்தைக் கேட்டு வாங்கியதாக கூறியுள்ளார்.

அதன்பின்னர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை புகாரளிக்குமாறு வற்புறுத்தி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும் அதில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணின் இந்த புகார், ஒட்டுமொத்த விவகாரத்தையும் தலைக்கீழாக மாற்றியுள்ளது. இதனை குறிப்பிட்டு தேர்தலுக்காக பாஜக மற்றும் மோடியின் கேவலமான நாடகம் என திருணாமூல் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories