அரசியல்

நீட் முறைகேடு : “எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?” - கனிமொழி NVN சோமு கேள்வி !

நீட் முறைகேடு : “எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?” - கனிமொழி NVN சோமு கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மருத்துவ படிப்புக்களுக்குக் கட்டாய நீட் தேர்வை ஒன்றிய அரசு அறிவித்தது முதல் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்துபோய் வருகிறது. நீட் தேர்வை தமிழ்நாடு அரசும், மக்களும் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு வேண்டும் என்று சட்டரீதியாக அரசு எதிர்கொண்டு வருகிறது. அதேபோல் நீட் தேர்வால் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இதற்கு அதிகாரிகளே உடந்தையாகவும் இறுகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்று வருகிறது. அதிலும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் எளிதாக அரங்கேறி வருகிறது.

நீட் முறைகேடு : “எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?” - கனிமொழி NVN சோமு கேள்வி !

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட முறைகேடு நடந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் டெல்லி, ராஜஸ்தான், பீகார், குஜராத், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீட் தேர்வு முடியும் முன்னரே வினாத்தாள் இணையத்தில் வெளியானது.

அதோடு பல்வேறு பகுதிகளில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை மாணவர்கள் எழுதியுள்ளனர். இது தொடர்பாக சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மாணவர்கள், பெற்றோர்கள், தேர்வு அலுவலர்கள், MBBS மாணவர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு ரூ.10-லிருந்து ரூ.50 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

நீட் முறைகேடு : “எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?” - கனிமொழி NVN சோமு கேள்வி !

இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது நீட் தேர்வுக்கு ஒருநாள் முன்பாக பாட்னாவில் வினாத்தாளும், விடைகளும் 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு விவகாரத்துக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது திமுக எம்.பி கனிமொழி என்.வி.என் சோமுவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நீட் முறைகேடு : “எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?” - கனிமொழி NVN சோமு கேள்வி !

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “குஜராத்தில் 3 பேர், பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் என நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். முறைகேடுகளை தடுக்கத்தான் நீட் தேர்வு என்று சொல்லும் பாஜக, அவர்கள் ஆளக்கூடிய மாநிலங்களில் நடந்த இத்தகைய முறைகேடுகளுக்கு பொறுப்பேற்குமா?

இத்தனை ஆண்டுகளாக நம் வீட்டு பிள்ளைகள் தகுதி இருந்தும் தங்கள் மருத்துவராகும் கனவை நனவாக்க முடியாமல் போனதற்கு ஒன்றிய அரசு பதில் சொல்லுமா? நாங்கள் நீட்டை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்திய போதெல்லாம் எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories