அரசியல்

“பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும், இல்லையென்றால்...” - அழுதுகொண்டே கூறிய ஷிண்டே... ஆதித்ய தாக்கரே பகீர் !

பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையென்றால், அனைவரும் பாஜக அரசால் கைது செய்யப்படுவோம் என்று ஏக்நாத் ஷிண்டே அழுதுகொண்டே கூறியதாக உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

“பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும், இல்லையென்றால்...” - அழுதுகொண்டே கூறிய ஷிண்டே... ஆதித்ய தாக்கரே பகீர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் 5 கட்டமாக நடைபெறுகிறது. இதில் 4-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் தேதி நாளையொடு (25.04) நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிவசேனா கட்சி வேட்பாளர் சஞ்சோக் வேட்பு மனுதாக்கல் இன்று செய்தார்.

இதனை முன்னிட்டு சிவசேனா கட்சி தலைவரும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரேவும் வேட்புமனுதாக்கல் செய்ய உடன் சென்றிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையென்றால், அனைவரும் பாஜக அரசால் கைது செய்யப்படுவோம் என்று ஏக்நாத் ஷிண்டே அழுதுகொண்டே கூறியதாக தெரிவித்துள்ளார்.

“பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும், இல்லையென்றால்...” - அழுதுகொண்டே கூறிய ஷிண்டே... ஆதித்ய தாக்கரே பகீர் !

இதுகுறித்து அவர் பேசியதாவது, "பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டே செல்வதற்கு முன்பாக, அவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். அந்த சமயத்தில்தான் அவரது பண குடோன்கள் பாஜக அரசால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. எனவே உத்தவ் தாக்கரேவிடம் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஷிண்டே கூறினார்.

மேலும் தனது தாடியை சொறிந்து கொண்டே அழத் தொடங்கினார். அதோடு தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனக்கு இது சிறை செல்லும் வயது இல்லை என்றும் அழுதுகொண்டே கூறினார். பாஜகவுடன் கைகோர்ப்போம், இல்லையெனில் என்னை சிறையில் அடைத்துவிடுவார்கள் என்றும் அவர் பேசினார்" என்றார்.

“பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும், இல்லையென்றால்...” - அழுதுகொண்டே கூறிய ஷிண்டே... ஆதித்ய தாக்கரே பகீர் !

ஆதித்ய தாக்கரேவின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜகவில் சேர்ந்த பிறகு, பாஜக வாஷிங் மெஷின் மூலம் ஊழல்வாதிகள் குற்றவாளிகள் குற்றமற்றவர்களாக மாறுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் அச்சுறுத்தல் காரணமாக பாஜகவுடன் கைகோர்த்ததாக ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சியை கவிழ்த்து பாஜக கூட்டணியோடு ஆட்சியமைத்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே. மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சியை பிடித்த பட்டியலில் மகாராஷ்டிராவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories