அரசியல்

எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க! : சூழ்ச்சியால் ஒற்றை அதிகாரத்தை நிலைநாட்டும் அவலம்!

சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், மேயர் தேர்தல் என ஜனநாயகத்தை நிலைநாட்டுகிற அனைத்து முறையிலும் சர்வாதிகாரத்தை விதைக்கும் பா.ஜ.க.

எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க! : சூழ்ச்சியால் ஒற்றை அதிகாரத்தை நிலைநாட்டும் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி உலகளவில் தவிர்க்க முடியாததாய் அமைந்திருக்கிற காலத்திலும், எவ்வாறெல்லாம் ஜனநாயக மோசடி செய்யலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.

அவ்வகையில், இந்து - இஸ்லாமிய மதத்தினருக்கிடையே பிளவை உண்டாக்கி, ஒற்றை அதிகாரத்தால், இந்து மதத்திற்கு அப்பாற்பட்ட வல்லாதிக்க இந்துத்துவ கொள்கையை, இந்தியாவில் நிலைநாட்ட பல்வேறு வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

முதல் வேலையாக, ஜனநாயகத்திற்கு அடிப்படையாக விளங்குகிற தேர்தல் நடைமுறையில் நிலவும் போட்டிகளை தகர்த்து, போட்டியற்ற வெற்றியை ருசிக்க முயன்று வருகிறது மோடி அரசு.

கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் நாள் நடந்த, சண்டிகர் மேயர் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் குல்தீப் குமாரும், பா.ஜ.க சார்பில் மனோஜ் சோன்கரும் முதன்மை போட்டியாளர்களாக பங்கேற்று,

ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றியடைவார் என உறுதியடைந்த நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் செல்லாது என பா.ஜ.க.விற்கு வெற்றி வாகை சூட்டப்பட்டது.

இதனையடுத்து, இந்தியா கூட்டணி உச்சநீதிமன்றம் சென்று விசாரித்ததில், CCTV-ல் பா.ஜ.க பார்த்த தில்லுமுல்லு வெளிப்பட்டு, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க! : சூழ்ச்சியால் ஒற்றை அதிகாரத்தை நிலைநாட்டும் அவலம்!

இதற்கு சற்று மாற்றாக, மக்களவை முதற்கட்ட தேர்தலுடன் இணைந்து நடந்த அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலின் போது, எதிர்க்கட்சி தலைவர்களை தன் கட்சியில் இணைத்து, சுமார் 10 சட்டமன்ற வேட்பாளர்களை போட்டியின்றி வெற்றிபெற செய்துள்ளது பா.ஜ.க. இதனால், தேர்தலுக்கு முன்பே, பா.ஜ.க.வின் வெற்றி ஓரளவு உறுதியும் பெற்றுள்ளது.

அவ்வரிசையில், தற்போது குஜராத் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பே, சூரத் தொகுதி எதிர்க்கட்சி வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்து பா.ஜ.க வேட்பாளரை வெற்றி பெற செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க.

அதற்கு காங்கிரஸால் முன்னிறுத்தப்பட்ட சூரத் வேட்பாளர் நிலேஷ் கும்பானியும் உடந்தை என்பது அண்மையில் வெளிப்பட்டுள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப்ரஃபுல் டொகடியா, “குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதற்கு, காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியும் உடந்தை.

பா.ஜ.க.விற்கு மறைமுகமாக உதவிய, நிலேஷ் கும்பானி கோவாவில் தலைமறைவாக இருக்கிறார். விரைவில், அவர் பா.ஜ.க.வுடன் இணைந்துவிட்டார் என்ற தகவலும் வெளியாகும்” என தெரிவித்தார்.

சிவசேனா (தாக்கரே) MP பிரியங்கா சதுர்வேதி, “ஜனநாயக நாட்டில், எதிரணியே இல்லாமல் ஆக்குவதற்கு எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதும் அல்லது எதிர்க்கட்சி தலைவர்களை விலைகொடுத்து வாங்குவதுமே பா.ஜ.க.வின் முதன்மை செயலாக மாறியுள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, ஜனநாயகத்தை அழித்து, ஒற்றை அதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் பா.ஜ.க, தேர்தல் முறையில் செய்யும் பித்தலாட்டங்கள் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories