அரசியல்

அதானி மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கை எங்கே? : காங்கிரஸ் கட்சி கேள்வி!

செபி அமைப்பின் விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அதானி மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கை எங்கே? : காங்கிரஸ் கட்சி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு குற்றம்சாட்டியது. மேலும் பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியது.

இந்த அறிக்கை இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்தன.

இந்த மோசடி குறித்து ஒன்றிய அரசு விசாரணை நடத்த வேண்டும் நாடாளுமன்றம் வரை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. பிறகுதான் இம்முறைகோடு குறித்து செபி விசாரணை நடத்தியது. இருந்தும் இந்த விசாரணை மீதான விவரங்களை ஒன்றிய பா.ஜ.க அரசு வெளிப்படையாக கூறாமல் மவுனமக இருந்து வருகிறது.

இந்நிலையில் அதானி மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், விதிகளை மீறி பங்குச்சந்தைகளில் அதானி நிறுவனம் முதலீடு செய்து முறைகேடு செய்துள்ளதை செபி கண்டறிந்துள்ளது. எனவே செபி அமைப்பின் விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அதானி நிறுவன மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories