அரசியல்

விதிமீறலில் அதானி குழுமம்! : தேர்தல் நேரத்தில் வெளியான மற்றொரு உண்மை!

12 அந்நிய நிறுவனங்கள், இந்திய விதிமுறைகளை மீறி, அதிகப்படியான முதலீடுகளை அதானிக்கு வழங்கியது அம்பலம்!

விதிமீறலில் அதானி குழுமம்! : தேர்தல் நேரத்தில் வெளியான மற்றொரு உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய பொருளாதாரத்தையே விற்க வழி இருந்தால், அதுவும் இந்நேரம் அதானி வசம் சென்றிருக்கும் என்பது ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.

அதன் வெளிப்பாடாகவே, மோடி ஆட்சிக்கு பின், இந்திய துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், மின் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட எண்ணற்ற அரசு நிறுவனங்கள், அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்பட்டது.

இது குறித்து, கேள்வி எழுப்பியதற்காக, முன்னாள் பிரதமர் வேட்பாளர் என்று கூட பாராமல், ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை நீக்கி, அரசு இல்லத்தை விட்டு வெளியேற்றினர் பா.ஜ.க.வினர்.

எனினும், இந்த அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைக்கு, சட்டப்படி விடை காண்பேன் என ராகுல் காந்தி உச்சநீதிமன்றம் சென்று, தனது மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப்பெற்றார்.

ராகுல் காந்தியை தொடர்ந்து, திரிணாமுல் கட்சி மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவும் அதானி - மோடி தொடர்பு குறித்து கேள்வி எழுப்பியதால், மக்களவை உறுப்பினர் பதவியை பறிகொடுக்க நேர்ந்தது.

இவ்வாறான சூழலில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி அன்று, அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தில் முறைகேடு நடப்பதாக அறிக்கை வெளியிட்டது.

அதன் காரணமாக, பா.ஜ.க அரசின் உதவியால் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக உயர்ந்த அதானி சொத்து மதிப்பு, பல மடங்கு வீழ்ச்சியடைந்தது. ஆனால், அப்போதைய நிலையில் அதானி குழுமத்தால், ஹிண்டன்பர்க் அறிக்கை பொய் தகவலை பரப்புகிறது என தெரிவிக்கப்பட்டது.

விதிமீறலில் அதானி குழுமம்! : தேர்தல் நேரத்தில் வெளியான மற்றொரு உண்மை!

இந்நிலையில் இது குறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

எனினும், SEBI விசாரணையில் தொடர் மந்தம் நீடித்து வந்த நிலையில், தற்போது சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது ஹிண்டன்பர்க் தெரிவித்தது உண்மை தான் என அம்பலப்பட்டுள்ளது.

இது குறித்து, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், “அதானியின் 12 வெளிநாட்டு நிறுவனங்கள் விதிகளை மீறியிருப்பதாக SEBI கண்டுபிடித்திருக்கிறது. 12 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள், குற்றச்சாட்டை ஏற்காமல் அபராதம் செலுத்தி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாமென SEBI-யை அணுகியிருக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் மையமாக இருந்தது இந்த நிதிகள்தான்” என தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, “இனி SEBI என்ன நடவடிக்கை எடுக்கும்? அதானி நிறுவனங்களில் விதிகள் மீறி முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களை அமலாக்கத்துறை விசாரிக்குமா? இந்த முதலீடுகள் செய்வதற்கென மட்டுமே அந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டனவா? அல்லது அந்த நிறுவனங்களை வெறுமனே SEBI எச்சரித்து விட்டு விடுமா? விடைதான் எல்லாருக்கும் தெரியுமே!” என குற்றம் சாட்டினார்.

இவ்வாறு, தேர்தல் நேரத்திலும், அதானியை தாங்கிப்பிடிக்கும் மோடி அரசிற்கு எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories