அரசியல்

வெறுப்பு பேச்சுகளில் பாஜக ஆளும் மாநிலங்கள் முதலிடம் : அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் !

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளது

வெறுப்பு பேச்சுகளில் பாஜக ஆளும் மாநிலங்கள் முதலிடம் : அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களும், தனிநபர் தாக்குதலுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வெளிநாட்டிலிருந்து ஊடுருவி இந்தியாவுக்குள் வந்தவர்கள் என இஸ்லாமியர்கள் என்ற ரீதியிலும், காங்கிரஸ் மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு கொடுக்கிறது என்றும் மோசமான வகையில் பேசியிருந்தார்.

இந்த நிலையில், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளது என அமெரிக்கா வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘இந்தியா ஹேட் லேப்’ நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறுப்பு பேச்சுகளில் பாஜக ஆளும் மாநிலங்கள் முதலிடம் : அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் !

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளது.

* முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக 36 சதவிகிதமும் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் பேச்சு 25 சதவிகிதமும் அதிகரிப்பு.

* 2023-ல் மட்டும் முஸ்லிம்களை குறிவைத்து 668 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகின. இதில், 75 % சம்பவங்கள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

* பாஜக ஆளும் மற்றும் ஆட்சியில் இல்லாத மாநிலங்களோடு ஒப்பிட்டால், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் 78 சதவிகிதம் அரங்கேறின.

* வெறுப்பு பேச்சுகளில் பாஜக பிரமுகர்களின் பங்கு 10.6 சதவிகிதம். வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்துவதில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் முன்னிலையில் உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல வெறுப்பு பேச்சு சம்பவங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களளே முன்னிலை வகிக்கிறது.

வெறுப்பு பேச்சுகளில் டாப் 10 மாநிலங்கள் :

மகாராஷ்டிரா – 118

உத்தர பிரதேசம் – 104

மத்திய பிரதேசம் – 65

ராஜஸ்தான் – 64

அரியாணா – 48

உத்தராகண்ட் – 41

கர்நாடகா – 40

குஜராத் – 31

சத்தீஸ்கர் – 21

பீகார் - 18

banner

Related Stories

Related Stories