அரசியல்

“ஒட்டுமொத்த இந்தியர்களையும் தனது வார்த்தை ஜாலத்தால் முட்டாளாக்கியது யார்?” - அமைச்சர் மனோ தங்கராஜ்!

ஒட்டுமொத்த இந்தியர்களையும் தனது வார்த்தை ஜாலத்தால் முட்டாளாக்கியது யார்? April 19-ல் பதிலடி கொடுப்போம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

“ஒட்டுமொத்த இந்தியர்களையும் தனது வார்த்தை ஜாலத்தால் முட்டாளாக்கியது யார்?” - அமைச்சர் மனோ தங்கராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகிறது. தொடர்ந்து தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாகியுள்ளது.

கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தற்போது பாஜக அரசுக்கு எதிராக தங்கள் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை சொல்லியும், பாஜகவின் ஊழல், பொய்கள், குற்றங்கள், மக்கள் விரோத செயல்கள் என அனைத்தையும் வெளிச்சம்போட்டு காட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

“ஒட்டுமொத்த இந்தியர்களையும் தனது வார்த்தை ஜாலத்தால் முட்டாளாக்கியது யார்?” - அமைச்சர் மனோ தங்கராஜ்!

தொடர்ந்து மோடியின் 100 பொய்கள் என்று பலரும் இணையத்தில் பட்டியலிட்டு பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் தற்போது மோடி பாஜக அரசுக்கு எதிரான அலைகளை காண முடிகிறது. இந்த சூழலில் முட்டாளாக்கியவர்களுக்கு April 19-ல் பதிலடி கொடுப்போம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:

ஒரு நினைவூட்டல்:

இன்று April Fool என்கின்றனர் பலர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மனிதர் தந்திரமாகச் சொன்ன April Fool பொய்களை இன்னும் நம்பி கொண்டிருக்கிறது நமது இந்தியா!

ஆண்டுக்கு 2 கோடி வேலை என்றார்! நம்பினோம்..

அனைவருக்கும் 15 லட்சம் என்றார்! நம்பினோம்..

ஸ்விஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் இதோ வந்துவிட்டது என்றார்! நம்பினோம்..

50 நாட்களில் தீக்குளிப்பேன் என்று கண்ணீர் வீட்டார்! நம்பினோம்..

சமையல் பாத்திரங்களை தட்டினால் கொரோனா ஓடிவிடும் என்றார்! நம்பினோம்..

இதோ இந்தியா வல்லரசாகி விட்டது என்றார்! நம்பினோம்..

விநாயகருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது என்றார்! நம்பினோம்...

2022-ற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்றார்! நம்பினோம்..

ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்றார்! நம்பினோம்...

இவற்றை எல்லாம் சொன்னது யார்? ஒன்றாவது நிறைவேறியதா? எதுவும் இல்லை. ஒட்டுமொத்த இந்தியர்களையும் தனது வார்த்தை ஜாலத்தால் முட்டாளாக்கியது யார்? April 19-ல் பதிலடி கொடுப்போம். இந்தியாவை காக்க INDIA-வுக்கு வாக்களியுங்கள்

banner

Related Stories

Related Stories