அரசியல்

கருத்துக்கணிப்பு முடிவுகள் : முந்தும் இந்தியா கூட்டணி... தமிழ்நாட்டில் பெருவெற்றிபெறும் திமுக கூட்டணி !

லோக்போல் அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகள் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் : முந்தும் இந்தியா கூட்டணி... தமிழ்நாட்டில் பெருவெற்றிபெறும் திமுக கூட்டணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ஆரம்பம் முதலே அத்தனை கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லோக்போல் அமைப்பின் கருத்துக்கணிப்பும் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு தென்னிந்தியாவில் மொத்தமுள்ள 132 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 78 முதல் 82 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 28 முதல் 34 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் லோக்போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்துக்கணிப்பு முடிவுகள் : முந்தும் இந்தியா கூட்டணி... தமிழ்நாட்டில் பெருவெற்றிபெறும் திமுக கூட்டணி !

ஆந்திராவில் தனித்து களம் காணும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பத்து முதல் 11 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் 2 தொகுதிகளை இந்தியா கூட்டணி வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பாஜகவால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகாவில் இந்தியா கூட்டணிக்கு அதிகபட்சமாக 12 முதல் 14 இடங்களும், பாஜகவுக்கு 10 முதல் 12 இடங்களும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல தெலங்கானாவில் இந்தியா கூட்டணி 10 முதல்12 இடங்களையும், பாஜக 2 இடங்களையும் வெல்லும் என்றும் லோக்போல் அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

banner

Related Stories

Related Stories