அரசியல்

உ.பி-க்கு ரூ.25,495 கோடி... தென்மாநிலங்களுக்கு வெறும் ரூ.22,455 கோடி: ஒன்றிய அரசின் செயலால் அதிர்ச்சி !

ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் ஒட்டுமொத்த தென்மாநிலங்களை விட உத்தரப்பிரதேசத்துக்குக்கு அதிக தொகையை ஒதுக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-க்கு ரூ.25,495 கோடி... தென்மாநிலங்களுக்கு வெறும் ரூ.22,455 கோடி: ஒன்றிய அரசின் செயலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியபோது, "ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடி.

அதே சமயத்தில் உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி. உத்தர பிரதேசம், பீகாருக்கு 200% பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64% மட்டுமே வழங்கப்படுகிறது. நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிதி பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்சம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. மேலும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்மாநிலங்களும் பாதிக்கப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டது. இதனை தென்மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் பகிரங்கமாக பொதுவெளியில் கூறத்தொடங்கினர்.

உ.பி-க்கு ரூ.25,495 கோடி... தென்மாநிலங்களுக்கு வெறும் ரூ.22,455 கோடி: ஒன்றிய அரசின் செயலால் அதிர்ச்சி !

இந்த நிலையில், ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் ஒட்டுமொத்த தென்மாநிலங்களை விட உத்தரப்பிரதேசத்துக்குக்கு அதிக தொகையை ஒதுக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 3-வது தவணையாக வரிப் பகிர்வை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.

மொத்தம் ரூ.1.42 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால். தமிழ்நாட்டுக்கு ரூ. 5797 கோடி, ஆந்திராவுக்கு ரூ.5752 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.5183 கோடி, தெலுங்கானாவுக்கு ரூ. 2987 கோடி, கேரளாவுக்கு ரூ. 2736 கோடி என மொத்தம் ரூ.22, 455 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு பலரும் ஒன்றிய அரசை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories