அரசியல்

ரூ.777 கோடியை வீணடித்த பா.ஜ.க அரசு : G20 மாநாட்டை முன்னிட்டு திறக்கப்பட்ட சுரங்கத்தால் உண்டான இடர்!

“பிரதமர் மோடியால், மிகுந்த ஆரவாரத்துடன் திறக்கப்பட்ட சுரங்கப்பாதையால் ரூ. 777 கோடி வீணாகியுள்ளது.

ரூ.777 கோடியை வீணடித்த பா.ஜ.க அரசு : G20 மாநாட்டை முன்னிட்டு திறக்கப்பட்ட சுரங்கத்தால் உண்டான இடர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சில மாதங்களுக்கு முன் G20 மாநாட்டை தலைமை தாங்கியது இந்தியா நடத்தியது. அதற்காக, இந்திய தலைநகரான தில்லியில் 20 நாடுகளின் முக்கிய தலைவர்கள் வருகை தந்தனர்.

அவர்களின் வரவை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு இறுதியில், சுமார் ரூ. 777 கோடி செலவில் ‘பிரகதி மைதான்’ என்ற சுரங்கப்பாதையை, மிகுந்த ஆரவாரத்துடன் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. சுமார் 1.3 கி.மீ நீளமுள்ள பிரகதி மைதான் சுரங்கம் நடு, தென்-கிழக்கு மற்றும் புது தில்லியை இணைக்கும் வகையில் அமைந்தது.

ஆனால், சுரங்கம் திறக்கப்பட்டது அங்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து வருகிறது. சுரங்கத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் கசிவு; நீர் தேங்குவது; கட்டுமான கோளாறுகள் போன்றவை வாகன ஓட்டிகளை கடும் சிரமத்தில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டு மழை பேரிடரின் போது சுமார் 1 மாத காலம் சுரங்கப்பாதை முழுக்க நீர் தேங்கிய நிலையிலேயே இருந்துள்ளது. மேலும், கட்டுமானத்தில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன என Indian express நாளிதழும் பதிவிட்டுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி X தளத்தில் பதிவிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூசண், “ரூ.777 கோடி செலவில், மிகுந்த ஆரவாரத்துடன் கட்டப்பட்ட ‘பிரகதி மைதான்’சுரங்கத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திறந்துவைத்து பல்வேறு புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.” ஆனால் தற்போது அந்த சுரங்கம் வீணாகியுள்ளது. இந்த கட்டுமானத்திற்கு “யார் அனுமதி வழங்கியது? இதிலும் 40% கையூட்டா? யார் இதனை விசாரிக்கப்போவது? அமலாத்துறையா அல்லது சி.பி.ஐ.யா?” என்ற வாதத்தை முன்வைத்துள்ளார்.

‘பிரகதி மைதான்’ கட்டுமானத்தில் ஏற்பட்ட சிக்கல் தேசிய அளவில் பெரிதானதையடுத்து அரசும், கட்டுமான குழுமமும் ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories