அரசியல்

“மரியாதை கொடுங்க...” - துணைக் குடியரசுத் தலைவர்-ஜெயா பச்சன் இடையே காரசாரமான விவாதம் ! | Video

நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜெயா பச்சனுக்கும் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் இடையேயான வாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“மரியாதை கொடுங்க...” - துணைக் குடியரசுத் தலைவர்-ஜெயா பச்சன் இடையே காரசாரமான விவாதம் ! | Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் சமாஜ்வாதி கட்சி எம்.பியான ஜெயா பச்சன் சபாநாயகரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதோடு, கோபமாக பேசியுள்ளார். இதுக்குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் ஜெயா பச்சன். அமிதாப் பச்சனின் மனைவியான இவர், சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் களம் கண்டார். தற்போது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் எம்.பியாக இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரில் அவ்வப்போது பல விஷயங்களுக்கு எதிராக இவர் குரல் எழுப்பியும் வந்துள்ளார்.

“மரியாதை கொடுங்க...” - துணைக் குடியரசுத் தலைவர்-ஜெயா பச்சன் இடையே காரசாரமான விவாதம் ! | Video

அப்படி ஒரு நிகழ்வுதான் நேற்றும் நடந்துள்ளது. நேற்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது விமானப் போக்குவரத்து துறை தொடர்பான கேள்வியை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தவிர்த்திருந்தார். கேள்வி எண் 17க்குப் பிறகு அடுத்த 18வது கேள்வியை புறக்கணித்துவிட்டு நேரடியாக 19வது கேள்வியை விவாதிக்கத் தொடங்கினார்.

இதனால் 18-வது கேள்வியை தவிர்த்து ஏன் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து அவையில் சலசலப்பு ஏற்பட, சபாநாயகரும் துணைக் குடியரசு தலைவருமான ஜக்தீப் தன்கர் எதிர்க்கட்சி எம்.பி-க்களை இருக்கையில் அமர சொல்லி அடுத்த கேள்விக்கு நகர்ந்தார்.

இருப்பினும் காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடா, தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருந்தார். இதனால் கோபமடைந்த சபாநாயகர், "நீங்கள் ஒன்றும் அவரின் (ஜெயா பச்சன்) செய்தித் தொடர்பாளர் அல்ல. இங்கு நீங்கள் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டியதில்லை" என்று காட்டமாக பேசினார். எனினும் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியதால், கேள்வி 19-ஐ முடித்து விட்டு 18-க்கு மீண்டும் வருவதாக கூறினார் சபாநாயகர்.

இதைத்தொடர்ந்து பேச எழுந்த ஜெயா பச்சனை பேச அனுமதிக்காமல் சபாநயாகர் தடுத்து அமரக்கூறினர். எனினும் தன்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்ட ஜெயா பச்சன், ஜக்தீப் தன்கரை நோக்கி, “உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. நீங்களோ அல்லது துணை சபாநாயகரோ எங்களை அமரச் சொன்னால், நாங்கள் அதை செய்வோம்.

ஆனால், வேறொரு உறுப்பினர் எங்களை உட்காருமாறு சைகை செய்தால் நாங்கள் அதை செய்ய மாட்டோம். கேள்வி கேட்பது எங்கள் உரிமை. ஒரு கேள்வியை எடுத்துக்கொள்ள முடியாது என்றோ அல்லது அதில் சிக்கல் இருக்கிறதென்றோ இல்லை அந்த கேள்வி பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் என்றோ நீங்கள் கூறினால், அதை நங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்களை அமருங்கள்...அமருங்கள்... என்று சொன்னவுடன் அமர்வதற்கு நாங்கள் ஒன்றும் பள்ளி குழந்தைகள் அல்ல. எங்களுடைய மரியாதையை நீங்கள் கொடுங்கள்.” என்றார். ஜெயா பச்சன் - துணைக் குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் இதையே நிகழ்ந்த இந்த காரசாரமான விவாதம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories