அரசியல்

நீரில் மாசு ஏற்படுத்துபவர்களுக்கு தண்டனை குறைப்பு : புதிய மசோதாவை தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு!

தொழிற்சாலை கழிவு, மனித கழிவு, நீர்நிலைகளில் குப்பை தேக்கங்கள் ஆகியவை அதிகரித்து வரும் நிலையில் மாசு ஏற்படுத்துபவர்களின் தண்டனைகளை குறைக்க முற்பட்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ்
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவில், குறிப்பாக வடமாநிலங்களில் நீர்நிலை கழிவுகள் பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக யமுனை, கங்கை நீரோட்டங்களில் குப்பை போடுவதும், தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாலும் தொடர்ந்து நீர் மாசுகள் அதிகரித்து வருகின்றன.

நீரில் ஏற்படும் மாசு காரணமாக, புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது, நீர் வளம் வீணாகிறது, அதோடு மக்களின் உடல்நிலை பாதிப்புகளும் அதிகளவில் உண்டாகின்றன. இவைகள் தடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் அறிவுறுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 நடைமுறையில் உள்ளது. அதன் படி, மாசு ஏற்படுத்துபவர்களுக்கு 3 மாதம் முதல் 7 ஆண்டு வரையிலான சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

அதனை நீர்த்துப்போகும் செய்யும் வகையில் நீர் மாசு உண்டாக்குபவர்களுக்கான தண்டனையை குறைக்கும் மசோதாவை முன்மொழிந்திருக்கிறார், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ்.

கடந்த ஆண்டு ஜன் விஷ்வஸ் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு காற்று மாசு உண்டாக்குபவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டது. மாற்றாக அபராதம் மட்டுமமே நிர்ணயிக்கப்பட்டது.

நீரில் மாசு ஏற்படுத்துபவர்களுக்கு தண்டனை குறைப்பு : புதிய மசோதாவை தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு!

அதேபோல், முன்மொழியப்பட்ட்டிருக்கும் நீர் மாசு மசோதா நிறைவேற்றப்பட்டால், நீரில் மாசு ஏற்படுத்துபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த சிறை தண்டனை நீக்கப்படும். வெரும் ரூ. 15 லட்சம் வரையிலான அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவை தாக்கல் செய்யும் போது பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி ஜாவ்ஹர் சிர்கார்,“சிறை தண்டனைக்கு விலக்கு அளித்து, அபராதம் மட்டும் விதிக்கப்படுவது, சட்ட மீறல்களை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. மாசுகளை ஏற்படுத்து தொழில் நிறுவனங்கள் அச்சமற்று உளவும் நிலையும் உண்டாக வாய்ப்புள்ளது,” என எச்சரிக்கை விடுத்தார்.


அதற்கு பதிலளித்த அமைச்சர் பூபேந்திர யாதவ், “அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது” என அலட்சியமாக கடந்தார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசுடன் கைகோர்த்துள்ள நிறுவனங்கள் உண்டாக்கும் சட்டமீறல்களிலிருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்ச்சாட்டுகின்றனர்.

banner

Related Stories

Related Stories