அரசியல்

Paytm நிறுவனம் பாஜகவுக்கு நிதி அளித்ததால்தான் முறைகேடு நடந்தும் தளர்வுகள் அளிக்கப்பட்டதா? - காங். கேள்வி!

Paytm நிறுவனம் பாஜகவுக்கு நிதி அளித்த காரணத்தால்தான் இவ்வளவு நீண்ட தளர்வு கொடுக்கப்பட்டதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Paytm நிறுவனம் பாஜகவுக்கு நிதி அளித்ததால்தான் முறைகேடு நடந்தும் தளர்வுகள் அளிக்கப்பட்டதா? - காங். கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டம் என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பா.ஜ.க அரசு அறிவித்தது. இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.இதன் பின்னர், புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை அறிமுகப்படுத்தியபோது ரொக்கப்பணத்தை ஒழித்து டிஜிட்டல் பணத்துக்கு மாறுவோம். கருப்பு பணத்தை ஒழிப்போம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி கருத்து தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து பலர் டிஜிட்டல் பண பரிமாற்றத்துக்கு மாறினர்.

ஆனால், இந்த நடவடிக்கையால் சாதாரண மனிதர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தையே சீரழித்தது. அதிலிருந்து தற்போது வரை இந்திய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையால் பெரிய அளவில் லாபமடைந்த நிறுவனம் என்றால் அது Paytm நிறுவனம்தான். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, கடன் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை செய்து வந்த Paytm நிறுவனம் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பெரிய அளவில் வளர்ந்தது. அதன் விளம்பரங்களில் பிரதமர் மோடியும் தனது முகத்தை காட்ட அது பெரிய அளவில் வளர்ந்து இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர், விதிகளுக்கு உட்படாதது, நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்தின் வங்கி சேவைகளை முழுவதுமாக நிறுத்தவேண்டும் என ரிசர்வ் அறிவித்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான சுப்ரியா ஸ்ரீனேட் பேசியதை டாக் செய்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் அதிகாரபூர்வ பக்கத்தில்,

"எங்கள் கேள்விகள்:

பிரதமர் மோடியின் விருப்பமான தொழிலதிபர்கள் தங்கள் நல்லுறவு காரணமாக சட்டத்தைப் புறக்கணிக்கிறார்களா?

இவ்வளவு விதி மீறல்கள் இருந்த போதிலும், பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஏன் இவ்வளவு நீண்ட தளர்வு கொடுக்கப்பட்டது?

பணமோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக அமலாக்கத்துறை (ED) இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பாஜக மற்றும் PM Cares நிதிக்கு பேடிஎம் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது?

அந்த நன்கொடையாலும், பிரதமர் மோடியுடனான உறவுகளாலும்தான் பேடிஎம் இதுவரை பிழைத்திருக்கிறதா?

பிரதமர் மோடியின் விருப்பமானவர்களான, அதானி மற்றும் இப்போது பேடிஎம்க்கு எதிராக ஏஜென்சிகள் ஏன் மெத்தனமாக இருக்கின்றன?

அரசியல் நபர்களுக்கு எதிராக 95% வழக்கு பதிவு செய்யப்படுவதில், அமலாக்கத்துறையின் செயல்பாடு திருப்தியாக உள்ளதா?

பேடிஎம் நுகர்வோரின் தரவு ரகசியமாக உள்ளதா அல்லது பாஜகவுடன் பகிரப்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories