அரசியல்

“CAA-வால் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம் !

பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லையோ, அதேபோலக் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தாலும் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“CAA-வால் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு குடியுரிமை சட்டங்களில் (CAA) மாற்றத்தை கொண்டு வருவதாக அறிவித்தது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (NRC) அறிமுகப்படுத்தியது. குடியுரிமை சட்டத்தில் மத ரீதியான பாகுபாடு கட்டப்படுவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான சரத்துக்கள் இருப்பதாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் எழுந்தது. இந்த சூழலில் கொரோனா பேரிடர் வந்ததால் அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் இந்த சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு சற்று நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் CAA சட்டம் குறித்து பாஜக தலைவர்கள் பேசிவரும் நிலையில், அண்மையில் ஒன்றிய அமைச்சர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக CAA சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“CAA-வால் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம் !

ஒன்றிய அரசின் முடிவிற்கு பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

“CAA-வால் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம் !

மத அடிப்படையிலும் - இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை ஏற்கனவே கிழித்து எறிந்த மக்கள், இம்முறை அதனை அமல்படுத்தத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும் தூக்கி எறிவார்கள்.

அடிமைகளின் உதவியோடு கொண்டு வரப்பட்ட மானுட விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்று நம் முதலமைச்சர் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லையோ, அதேபோலக் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தாலும் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், “மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAAவை கால்வைக்க விடமாட்டோம்" என தெரிவித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories