அரசியல்

நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய நபருக்குத் தேர்தலில் சீட் கொடுத்த பாஜக : தெலங்கானா மக்கள் அதிர்ச்சி!

நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய ராஜா சிங்கிற்கு தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய நபருக்குத் தேர்தலில் சீட் கொடுத்த பாஜக : தெலங்கானா மக்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இத்தேர்தலில் பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேதான் கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.

இரண்டு நாட்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை அடுக்கிறார். அதேபோல் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் சந்திரசேகர ராவ்.

அதேபோல் பா.ஜ.கவும் தேர்தலில் களம் கண்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 52 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இதில் நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய ராஜா சிங்கின் பெயர் இடம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய நபருக்குத் தேர்தலில் சீட் கொடுத்த பாஜக : தெலங்கானா மக்கள் அதிர்ச்சி!

கடந்த 2022ம் ஆண்டு ராஜா சிங் நபிகள் குறித்து அவதூறாகப் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருப்பினும் கடம் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து ராஜா சிங்கை பா.ஜ.க சஸ்பெண்ட் செய்தது

அதனால் அவர் பிஆர்எஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என கருதப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அவர் பா.ஜ.க சார்பாக கோஷாமஹால் தொகுதியிலேயே போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories