அரசியல்

அன்று தெலங்கானா.. இன்று கேரளா.. ஆளுநருக்கு எதிராக மாநில அரசுகள் எடுக்கும் அதிரடி முடிவு - ஆடிப்போன பாஜக!

மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள கேரள ஆளுநருக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

அன்று தெலங்கானா.. இன்று கேரளா.. ஆளுநருக்கு எதிராக மாநில அரசுகள் எடுக்கும் அதிரடி முடிவு - ஆடிப்போன பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்த மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் காலத்தை கடத்தி வருகிறார். இப்படி பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்துள்ளதால் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்று தெலங்கானா.. இன்று கேரளா.. ஆளுநருக்கு எதிராக மாநில அரசுகள் எடுக்கும் அதிரடி முடிவு - ஆடிப்போன பாஜக!

இதைத்தொடர்ந்து ஒப்புதல் கொடுக்காமலிருந்து வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். இருப்பினும் மீண்டும் தமிழ்நாட்டு ஆளுநர், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதேபோல்தான் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் செயல்பாடுகள் உள்ளன.

அந்த வகையில் கேரள மாநிலத்திலும் ஆளுநர் ஆரிப், அம்மாநில அரசு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்களை 8 மசோதாக்களுக்கு 22 மாத காலமாக அம்மாநில ஆளுநர் ஆர்ப் முகமதுகான் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதற்காக அம்மாநில அரசு அழுத்தம் கொடுத்த போதிலும், அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் உள்ளார்.

அன்று தெலங்கானா.. இன்று கேரளா.. ஆளுநருக்கு எதிராக மாநில அரசுகள் எடுக்கும் அதிரடி முடிவு - ஆடிப்போன பாஜக!

இந்த சூழலில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத கேரள ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக முடிவெடுத்துள்ளது. இதற்காக ஒன்றிய அரசின் முன்னாள் அட்டர்ணி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் ஆலோசனை பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய ஏதுவாக ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை கேரள அரசு தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், “விரிவான விவாதங்களுக்குப் பிறகு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. நீண்ட காலத்திற்குப் பிறகும், இந்த மசோதாக்கள் சட்டமாகவில்லை. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் சட்டமாக மாறாமல் காலதாமதம் செய்வது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சாராம்சத்துக்கு ஏற்புடையதல்ல” என்றார்.

அன்று தெலங்கானா.. இன்று கேரளா.. ஆளுநருக்கு எதிராக மாநில அரசுகள் எடுக்கும் அதிரடி முடிவு - ஆடிப்போன பாஜக!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே போல் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அவர் மீது அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தமிழிசை. இந்த சூழலில் தற்போது கேரள மாநில அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர்களின் அடாவடித்தனத்தால் மாநில அரசுகள் தங்களது உரிமைகளைப் போராடிப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையே இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories