இந்தியா

”பெண்களுக்கு எதிரான கட்சி பாஜக” : ம.பியில் நடந்த கொடூர சம்பவத்தை குறிப்பிட்டு கார்கே விமர்சனம்!

பெண்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவத்தைக் குறிப்பிட்டு மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

”பெண்களுக்கு எதிரான கட்சி பாஜக” : ம.பியில் நடந்த கொடூர சம்பவத்தை குறிப்பிட்டு கார்கே விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அமைந்திருக்கும் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் ரத்தக்கறையுடன் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி உதவி கேட்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மணி நேரத்திற்கு மேல் சிறுமி ரத்தக்கறையுடன் இருந்ததை பார்த்த ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து மருத்துவர்கள் போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மனதை உலுக்கும் இச்சம்பவத்திற்குப் பலரும் கடும் எதிர்வினைகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், பெண்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என மத்தியப் பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவத்தைக் குறிப்பிட்டு மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

”பெண்களுக்கு எதிரான கட்சி பாஜக” : ம.பியில் நடந்த கொடூர சம்பவத்தை குறிப்பிட்டு கார்கே விமர்சனம்!

இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி ஊர் ஊராகச் சென்று பேசி கைதட்டல் வாங்க மோடி முயற்சிக்கிறார். ஆனால் பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் 12 வயது சிறுமி வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறார்.

பெண்கள் வல்லுறவு வழக்குகள் அதிகம் பதிவாவது பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில்தான். ஒவ்வொரு நாளும் 8 வல்லுறவு வழக்குகள் அங்கு பதிவாகின்றன. மோடியும் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங்கும் தேர்தல் பிரசாரத்தை விட்டுக் கொஞ்சம் வந்தால், மத்தியப்பிரதேச பெண்களின் அலறல் சத்தத்தை அவர்கள் கேட்க முடியும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories