அரசியல்

”உச்ச நீதிமன்ற அமைப்பை சிதைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு”.. ப.சிதம்பரம் கடும் தாக்கு!

நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் அரசாங்கம் அழித்து வருகிறது என ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார.

”உச்ச நீதிமன்ற அமைப்பை சிதைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு”.. ப.சிதம்பரம் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இவர்களை நியமிப்பதில் அமைதியாக இருக்கிறது. இதனால் வழக்குகளை முடிக்க முடியாமல் உயர் நீதிமன்றங்களில் காத்துக்கிடக்கின்றன.

இதற்கிடையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாகப் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு குறித்து 10 நாட்களுக்கு ஒருமுறை நீதிபதிகளின் பரிந்துரைகள் குறித்து ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தினர்.

”உச்ச நீதிமன்ற அமைப்பை சிதைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு”.. ப.சிதம்பரம் கடும் தாக்கு!

இந்நிலையில் உச்ச நீதிமன்ற அமைப்பை ஒன்றிய அரசு சிதைக்கிறது என ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைத்தள பதிவில், "உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட 70 பரிந்துரைகள் அரசிடம் பல மாதங்களாக நிலுவையில் இருப்பது ஏன்?

கொலிஜீயத்தின் பரிந்துரைகளின் படி நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் அரசாங்கம் அழித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories