இந்தியா

"திறமையற்ற மணிப்பூர் முதலமைச்சரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்".. மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!

மணிப்பூர் முதலமைச்சரை பிரதமர் மோடி உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

"திறமையற்ற மணிப்பூர் முதலமைச்சரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்"..  மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இம்மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட மணிப்பூர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஒன்றிய அரசு விவாதத்திற்கு மறுத்தது. மேலும் 100 நாட்களுக்கு மேல் வன்முறை நீடித்து வரும் நிலையிலும் கூட பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் இருந்து வருகிறார். ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். இதற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் மணிப்பூரில் காணாமல் போன 20 வயது மாணவனும், 17 வயது மாணவியும் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ளது. பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

"திறமையற்ற மணிப்பூர் முதலமைச்சரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்"..  மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!

நேற்று முன்தினம் தான் அம்மாநிலத்தில் இணைய சேவைகள் வழங்கப்பட்டது. மீண்டும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து இணையச் சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலம் பற்றமான மாநிலம் என தற்போது அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் மணிப்பூர் வன்முறையில் குழந்தைகள் பலிகடா ஆகிவிட்டதற்காக ஒன்றிய அரசு வெட்கப்பட வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் கண்டனம் தெரவித்தள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதளத்தில், "மணிப்பூர் மக்கள் 147 நாட்களாக அவதிப்படுகின்றனர். ஆனால் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை. இந்த வன்முறையில் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மணிப்பூர் மாநிலம் போர்க்களமாக மாறியதற்கு பாஜகதான் காரணம். பா.ஜ.கவின் திறமையற்ற மணிப்பூர் முதலமைச்சரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories