அரசியல்

“மோடி அரசால் 14 கோடி மக்களுக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டுள்ளது..” - ஜெய்ராம் ரமேஷ் பரபர !

14 கோடி இந்தியர்களுக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

“மோடி அரசால் 14 கோடி மக்களுக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டுள்ளது..” - ஜெய்ராம் ரமேஷ் பரபர !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நாளை நிறைவடையவுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சூழலில் 14 கோடி மக்களின் உணவு உரிமை மறுக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பரபர குற்றம்சாட்டியுள்ளார்.

“மோடி அரசால் 14 கோடி மக்களுக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டுள்ளது..” - ஜெய்ராம் ரமேஷ் பரபர !

இதுகுறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெய்ராம் ரமேஷ், "இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் உணவு உரிமை திட்டத்தில் இருந்து 14 கோடி மக்கள் விடுபட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாதது நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத தோல்வி. இந்தோனேசியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ஜி 20 குழுவில் உள்ள பிற வளரும் நாடுகளும் கூட கோவிட் -19 இருந்தபோதிலும் தங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் வரை பயனாளிகளின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இந்தியாவின் சுழற்சி முறையிலான 18வது G20 உச்சிமாநாட்டின் தொடக்கமானது, சிந்திக்க வேண்டிய தருணம் ஆகும். 2021 இல் நடைபெறவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாதது, NDA (No Data Available) கூட்டணி அரசாங்கத்தின் மிகப் பெரிய தோல்விகளில் ஒன்று.

“மோடி அரசால் 14 கோடி மக்களுக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டுள்ளது..” - ஜெய்ராம் ரமேஷ் பரபர !

1951-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது வரை நடக்கவில்லை. இது மோடி அரசாங்கத்தின் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் மிக முக்கியமான புள்ளிவிவரப் பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை. இது நமது தேசத்தின் வரலாற்றில் முன்னோடியில்லாத தோல்வி.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாத காரணத்தினால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுமார் 14 கோடி இந்திய மக்கள் உணவு உரிமையில் இருந்து விடுப்பட்டுள்ளனர். 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாத காரணத்தினால், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 81 கோடி மக்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்ததால், 14 கோடி இந்தியர்கள் உணவு உரிமையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக 'அவுட்லுக் பிசினஸ்' அறிக்கை வெளியிட்டிருந்தது. தற்போது இரண்டு வருடங்களாகியும் புதிய பயனாளிகள் சேர்க்கப்படாமல், மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன" என்றார்.

“மோடி அரசால் 14 கோடி மக்களுக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டுள்ளது..” - ஜெய்ராம் ரமேஷ் பரபர !

இன்று நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களின் முன்பு அவரவர் நாட்டின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இது எதிர்க்கட்சிகள், நாட்டு மக்களிடையே வலுத்த கண்டனங்களை எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories