அரசியல்

ஜி20 கூட்டமைப்பில் இணைந்த ஆப்பிரிக்க யூனியன்.. ஜி21 ஆக பெயர்மாற்றம் பெற்ற கூட்டமைப்பு.. முழு விவரம் என்ன?

ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதால் அதன் பெயர் ஜி21 என மாற்றப்பட்டுள்ளது.

ஜி20 கூட்டமைப்பில் இணைந்த ஆப்பிரிக்க யூனியன்.. ஜி21 ஆக பெயர்மாற்றம் பெற்ற கூட்டமைப்பு.. முழு விவரம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 1999-ம் ஆண்டு ஜி-20 கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பே உலகின் மிகப்பெரிய பொருளாதார மற்றும் சக்திவாய்ந்த கூட்டமைப்பாகக் கருதப்படுகிறது.

உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் 80% பங்களிப்பையும், மக்கள் தொகையில் 75 % பங்களிப்பையும் கொண்டுள்ளன. இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஆண்டுதோரும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பர்.

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் (செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி) நடைபெறுகிறது.

ஜி20 கூட்டமைப்பில் இணைந்த ஆப்பிரிக்க யூனியன்.. ஜி21 ஆக பெயர்மாற்றம் பெற்ற கூட்டமைப்பு.. முழு விவரம் என்ன?

இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் ஆப்ரிக்க நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஜி-20 மாநாட்டின் போது, செனகலின் ஜனாதிபதி இதற்கான கோரிக்கையை முன்வைத்தார். இதனை முதல்முறையாக சீனா ஏற்றுக்கொண்ட நிலையில், இந்தோனேசியாவும் ஆதரித்தது.

மேலும், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் ஆப்ரிக்க கூட்டமைப்பை ஜி-20 கூட்டமைப்பில் சேர்க்க ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அதிகாரபூர்வமாக ஆப்ரிக்க கூட்டமைப்பு ஜி-20 கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ஜி-20 கூட்டமைப்பின் பெயர் ஜி-21 கூட்டமைப்பு என பெயர்மாற்றம் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories