அரசியல்

இடைத்தேர்தல்.. பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது இந்தியா கூட்டணி : ப.சிதம்பரம்!

இன்றைய இடைத்தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு ஒரு நல்ல அறிகுறி என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்.. பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது இந்தியா கூட்டணி : ப.சிதம்பரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளா, திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்குச் செப்டம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மேற்குவங்கம் தூப்குரி தொகுதியில் போட்டியிட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தபஸி படுதோல்வி அடைத்தார். மேலும் ஏற்கனவே இந்த தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில் இடைத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது வெற்றியின் மூலம் பா.ஜ.கவிடம் இருந்து இந்த தொகுதியைக் கைப்பற்றியுள்ளது.

அதேபோல் ஜார்கண்ட் மாநிலம் டும்பிரி தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பீபி தேவி 1,35,480 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் உத்தர பிரதேசம் கோசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.கவின் கோட்டையாகக் கருதப்படும் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தோல்வியடைந்துள்ளது அரசியல் வட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கேரளாவில் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். மற்ற 3 இடைத்தேர்தல் தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றம் தேர்தல் நெருங்கும் வேலையில், இந்தியா கூட்டணி உருவாகியுள்ள நேரத்தில் நடந்த இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்நிலையில் 6 மாநிலங்களில் நடந்த 7 இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இன்றைய இடைத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு ஒரு நல்ல அறிகுறி என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ஜி20 உச்சி மாநாட்டிற்குத் தலைவர்களின் வருகை அல்ல இன்றிய செய்து. இன்று அறிவிக்கப்பட்ட 7 இடைத்தேர்தல்களின் முடிவுகள்தான் முக்கிய செய்து.

இடைத்தேர்தல்.. பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது இந்தியா கூட்டணி : ப.சிதம்பரம்!

இந்தியா கூட்டணி 4:3 என்ற கணக்கில் பா.ஜ.கவை வீழ்த்தியுள்ளது. திரிபுராவில் 2 இடங்களிலும், உத்தரகாண்டில் ஒரு தொகுதியிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. கேரளா, ஜார்கண்ட், உத்தர பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியுள்ளது.

இதில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க அதீத பெரும்பான்மையுடன் ஆளும் கட்சியாக உள்ளது. பா.ஜ.கவும் அதன் பணபலமும் தோற்கடிக்க முடியாதவை அல்ல. பா.ஜ.க.வின் கோட்டையில் கூட பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்பதை இந்தியா கூட்டணி நிரூபித்துள்ளது. இன்றைய இடைத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு ஒரு நல்ல அறிகுறி." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories