அரசியல்

'சன்ஹிதா', 'சாக்‌ஷியா'.... - சட்டங்களின் பெயரை இந்தியில் மாற்றும் பாஜக அரசு.. முதலமைச்சர் கடும் கண்டனம் !

பாஜக அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'சன்ஹிதா', 'சாக்‌ஷியா'.... - சட்டங்களின் பெயரை இந்தியில் மாற்றும் பாஜக அரசு.. முதலமைச்சர் கடும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். பலர் நமது நாட்டின் பெயர் இந்தியாவே இல்லை பாரதம் என்றும் கூறி வருகின்றனர்.

தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடந்துவரும் நிலையில் அதிலும் பாஜகவின் இந்த அச்சம் வெளிப்படையாக தேறிட்டன்ஹது. இந்த கூட்டத்தில் பாஜக பல்வேறு மசோதாக்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக இந்தியா என்ற பெயரை மாற்றும் விதமாக சட்டங்களின் பெயரில் இருந்த இந்தியா என்ற பெயரை நீக்கி பாரத் என பெயர் சூட்ட பாஜக முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை ஒன்றிய பாஜக அரசு மாற்றி, அதற்கு பதில், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா என்ற பெயர்களை சூட்டுவதற்கான மசோதாக்களை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் சம்ஸ்கிருத திணிப்பிலும் பாஜக பகிரங்கமாக ஈடுபட்டு வருகிறது.

'சன்ஹிதா', 'சாக்‌ஷியா'.... - சட்டங்களின் பெயரை இந்தியில் மாற்றும் பாஜக அரசு.. முதலமைச்சர் கடும் கண்டனம் !

இந்த நிலையில், பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "காலனியாதிக்க முறையை அகற்றுவதாக சொல்லி மறுகாலனியாக்கம் செய்கிறார்கள். இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷியா மசோதாக்கள் மொழிவழி எதேச்சதிகாரத்தை முன் வைக்கிறது.

இதுவே அதனளவில் இந்தியாவின் ஒற்றுமையை அவமதிக்கும் செயலாகும். தமிழ் என்கிற வார்த்தையை உச்சரிக்கும் தார்மிகத்தை பாஜகவினரும் பிரதமரும் இழந்துவிட்டனர்.இத்தகைய ஒடுக்குமுறை தன்மைகளுக்கு எதிரான முன்னணிப் படையாக வரலாற்றில் தமிழ்நாடும் திமுகவும் இருந்திருக்கிறது.

நமக்கான மொழி அடையாளத்தை காக்கும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் தொடங்கி, இந்தி திணிப்புக்கு எதிராக நாம் முன்பு நின்றிருக்கிறோம். இனியும் சமரசமற்ற உறுதியுடன் நிற்போம்.இந்தி காலனியவாதத்துக்கு எதிரான போராட்ட நெருப்பு மீண்டும் மூட்டப்பட்டிருக்கிறது. நம் அடையாளத்தை இந்தியைக் கொண்டு மாற்ற முயலும் பாஜகவின் முயற்சி, உறுதியாக எதிர்க்கப்படும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories